ஏவிஎம்மில் நடந்த அவமரியாதை: பாரதிராஜா பேச்சு

சந்தானம் படங்களின் வெளியீட்டுப் பிரச்சினை தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் தனக்கு ஏவிஎம்மில் நடந்த அவமரியாதை குறித்து பாரதிராஜா பேசினார். இது தொடர்பாக பாரதிராஜா பேசியதாவது: ''அதிசயம் ஆனால் உண்மை. இது ஒரு ஆச்சரியமான மேடை. இரண்டு தயாரிப்பாளர்களுமே ஒரு பெரும் கத்திச்சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். என்ன இது பிரச்சினையாக இருக்கிறது. போய் பார்ப்போம் என்று இருவரையும் பார்த்தவுடன், கத்தியைக் கீழே போட்டுவிட்டார்கள். இதுதான் பாரதிராஜா என்ற பெயருக்குக் கிடைத்த மரியாதை. இரண்டு தரப்பிலும் நியாயம் இருக்கிறது. 'சர்வர் சுந்தரம்' தயாரிப்பாளர் செல்வகுமார் படம் முடிந்து நாளாகிவிட்டது. இப்போதுதான் ரிலீஸ் பண்றார். இங்கு படம் பண்ணுவது கஷ்டம். திரையுலகிற்கு வந்து 48 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும், இப்போது படம் எடுத்து முழித்துக் கொண்டிருக்கிறேன். ஆசைப்பட்டு திரையுலகிற்குள் வரும் தயாரிப்பாளர்கள் உடைந்து போகக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.…

ஆட்டோ – பேருந்து மோதி கிணற்றில் விழுந்து 26 பயணிகள் பலி!

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் ஆட்டோவும், அரசுப் பேருந்தும் நேற்று நேருக்கு நேர் மோதிக்கொண்டு சாலையோரக் கிணற்றுக்குள் விழுந்த விபத்தில் 9 பெண்கள் உள்பட 26 பேர் பலியாயினர். நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான்-தியோலா சாலையில் இந்த பயங்கர விபத்து நேற்று மாலை நடந்தது. நாசிக் மாவட்டத்தின் கல்வான் நகரில் இருந்து துலே மாவட்டத்துக்கு அரசுப் பேருந்து பயணிகளுடன் சென்றது. அப்போது, எதிரே பயணிகளுடன் ஆட்டோ ஒன்றும் வந்தது. இரு வாகனங்களும் கண் இமைக்கும் நேரத்தில் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் பேருந்தின் கீழ் ஆட்டோ சிக்கிக் கொண்டது. பேருந்து வேகம் தாளாமல் சாலை ஓரம் இருந்த கிணற்றுக்குள் விழுந்தது. இதில் ஏராளமானோர் பலியானார்கள். நாசிக் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆர்த்தி சிங் கூறுகையில், " பேருந்தும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.…

ஸ்டாலின், உதயநிதியால் திமுக தொண்டர்கள் கண்ணீர் சிந்துவார்கள்

ஸ்டாலின், உதயநிதி ஆகியோரால் டி.ஆர்.பாலு, நேரு போன்ற திமுக தலைவர்கள் கண்ணீர் சிந்தியது போல திமுக தொண்டர்களும் கண்ணீர் சிந்துவார்கள்" என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசியுள்ளார். மதுரையில் நடைபெற்ற அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இந்த பரபரப்பு கருத்தைத் தெரிவித்தார். அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது: எடப்பாடியாரால் மூன்று மணி நேரம் இந்த ஆட்சியைக் கொண்டு செல்ல முடியுமா? என்று கேட்டவர்களுக்கு முன்னால் மூன்று ஆண்டுகள் இந்த ஆட்சியை பல்வேறு திட்டங்களோடு கொண்டு செலுத்தியுள்ளார் முதல்வர். முடியுமா? முடியுமா? என்று கேட்டவர்களுக்கு முன்னால் இவரால் முடியும் என்று அவர்களே பாராட்டும் வகையில் பல்வேறு சாதனைகளை செய்து காட்டியவர் முதல்வர் எடப்பாடியார். இந்தியாவிலுள்ள 120 கோடி மக்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழகத்தின் வரைபடம் கடைசியில் இருந்தாலும்கூட நிர்வாகத்தில் தமிழகம் தான் முதலிடம் என்ற…

வெளிநாட்டில் படமாகிறது: அஜித்தின் ‘வலிமை’

அஜித்தின் ‘வலிமை’ படத்தில் இடம்பெற உள்ள ‘பைக் ரேஸ்’ வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இதற்காக உடற்பயிற்சிகள் செய்து தோற்றத்தை இளமையாக மாற்றி இருக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் முடித்துள்ளனர். அடுத்து சென்னையில் படப் பிடிப்பை நடத்த உள்ளனர். இதற்காக ஸ்டூடியோவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. வலிமை படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் விவரத்தை ரகசியமாக வைத்துள்ளனர். கதாநாயகி யார்? என்றும் தெரிவிக்கவில்லை. கியூமா குரோஷி கதாநாயகியாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவர் ஏற்கனவே காலா படத்தில் ரஜினியுடன் நடித்து இருந்தார். வலிமை படத்தில் அஜித்துக்கு பிடித்தமான பைக் மற்றும் கார்பந்தய…

படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது -ரஜினி

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என ரஜினிகாந்த் கூறி உள்ளார். டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் உலக புகழ் பெற்ற நிகழ்ச்சி 'மேன் வெர்சஸ் வைல்டு'. இக்கட்டான சூழ்நிலைகளில் உயிர் பிழைத்திருப்பதற்கான வழிமுறைகளை சொல்லும் இந்நிகழ்ச்சி இம்முறை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் படம் பிடிக்கப்பட்டு உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். பியர் கிரில்ஸ் இயக்கும் இந்த நிகழ்ச்சிக்காக காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு மாதம் கலந்து கொண்டு பியர் கிரில்சுடன் காடுகளில் பயணம் செய்தார். இது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது. மோடியின் பாதையில் ரஜினியும் தன் வாழ்க்கை குறித்து பியர்…

கொரோனா வைரஸ் என்ற பிசாசை வீழ்த்துவோம் சீன அதிபர் சபதம்

கொரோனா வைரஸ் ஒரு பிசாசு. அந்த பிசாசை வீழ்த்துவோம் என சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறினார். சீனாவின் ஹுபே மாகாணம் யுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. திபெத் தவிர மற்ற அனைத்து மாகாணங்களுக்கும் இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது. தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகளில் குறைந்தது 47 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. சீனாவுக்கு வெளியே எந்த இறப்பும் இதுவரை பதிவாகவில்லை. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த வைரஸ் தொற்று உச்சத்தை தொட…