குற்றவாளிகளுக்கு 22 ஆம் திகதி தூக்கு

இந்தியாவின் டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்ஸில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட அவர், ஓடும் பஸ்ஸிலிருந்து கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவத்தை 6 பேர் செய்தனர்.

இதன் பின்னர் வைத்தியசாலையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் அதஜனவரி 22 ஆம் திகதி காலை 7 மணிக்கு குற்றவாளிகளை தூக்கிலிடப்பட உள்ளனர்.

குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ், வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேர் இவ்வாறு மரண தண்டனையை நிர்பயா வழக்கில் எதிர்கொள்ள உள்ளனர்.

Related posts