29.12.2019 இன்றைய தமிழ் சினிமா செய்திகளின் தொகுப்பு..

தம்பி, ஆயுத எழுத்து, அன்பே சிவம், வேட்டை, ரன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் மாதவன். தற்போது மும்பையில் தங்கியிருக்கிறார். நிறைய படங்களில் வாய்ப்பு வந்தாலும் தேர்வு செய்தே படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறார். குறிப்பாக மசாலா படங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகிறார். அவர் நடித்த இறுதிச்சுற்று தமிழில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

அடுத்து விஜய்சேதுபதியுடன் இணைந்து விக்ரம் வேதா படத்தில் நடித்தார். தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கதையில் நடித்து வருகிறார். ‘ராக்கெட்டரி: தி நம்பி எபெக்ட்’ என அப்படத்துக்கு பெயரிடப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் மாதவன்.

அவர் கூறும்போது,’இறுதிச்சுற்று போன்ற நல்ல படங்கள் அவ்வப் போது உருவாகிறது. ஆனால் இறுதிச்சுற்று படத்தை ரிலீஸ் செய்வதற்கு 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. பலரும் மசாலா படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். எனக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. எல்லாவற்றையும் ஏற்பதில்லை. தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்கிறேன்’ என்றார்.

—–

அட்லி இயக்கும் இந்தி படத்தில் ஷாருக்கான் நடிக்க இருக்கிறார். அட்லி சொன்ன கதை பிடித்திருந்தாலும் அதில் நிறைய மாற்றங்களை சொல்லி இருக்கிறாராம் ஷாருக்கான். அத்துடன் திரைக்கதையில் பல்வேறு மாற்றங்கள் செய்யும்படியும் இந்த கதையை மேலும் மெருகேற்றும்படியும் கறாராக கூறியிருக்கிறார்.

அந்த மாற்றங்களையெல்லாம் செய்தால்தான் இதில் நடிக்க முடியும் என்றும் ஷாருக்கான் சொல்லிவிட்டாராம். இதனால் ஸ்கிரிப்ட்டை மாற்றியமைக்க ஒரு குழுவை நியமித்து வேகமாக வேலை பார்த்து வருகிறார் அட்லி.

——-

பல மொழிகளில் உருவாகும் புதிய வெப்சீரிஸ் மற்றும் பொன்னியின் செல்வன், வானம் கொட்டட்டும், நா நா, ரெண்டாவது ஆட்டம், பிறந்தாள் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வரும் சரத்குமார் கூறியதாவது: நான், என் மனைவி ராதிகா, மகள் வரலட்சுமி ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் பிறந்தாள் பராசக்தி. கதையும், எங்கள் கேரக்டரும் சரியாக அமைந்ததால், ஒரே படத்தில் மூவரும் இணைந்து நடிக்கிறோம். முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கிறேன். ஷெர்லாக் ஹோம்ஸ் போல் துப்பறியும் கதை கொண்ட இது, பல்வேறு மொழிகளில் 5 வருடங்கள் வரை ஒளிபரப்பாகும்.

போடா போடி படத்தில் நடித்த வரலட்சுமி, அந்த படம் பிரச்னையில் சிக்கி, ரிலீசாகும் வரை காத்திருந்தார். அந்த காலகட்டத்தில் ஒரு தந்தையாக என் மகளுக்கு நான் உதவி செய்து, பிரபல இயக்குனர்களின் படங்களில் அவரை நடிக்க வைத்திருக்க வேண்டும். அப்போது நான் அதை செய்யாமல் இருந்ததை நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன். இதற்காக என் மகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்று வரலட்சுமி தனியாகப் போராடி ஜெயித்திருக்கிறார்.

Related posts