என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கு நன்றி – ரஜினிகாந்த்

என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும், விருது வழங்கிய மத்திய அரசுக்கும் நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

இந்திய அரசின் திரைப்படத்துறை சார்பில் கோவாவில் 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது.

50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா விழாவை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இன்று தொடங்கி, 28-ந்தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், கோவாவில் நடைபெறும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு “ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி“ விருது வழங்கப்பட்டது. மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்துக்கு விருதை வழங்கினர்.

விருதை பெற்றுக்கொண்ட பின் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும், விருது வழங்கிய மத்திய அரசுக்கும் நன்றி. என்னுடைய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியவர்களுக்கு இந்த விருது சமர்ப்பணம்.

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், கோவா முதல்-மந்திரி, எனக்கு முன்மாதிரியாக திகழும் அமிதாப்பச்சன் ஆகியோருக்கு நன்றி.

தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts