இராணுவ, புலனாய்வுத் துறைக்கும் உரிய அதிகாரங்களை..?

நாட்டின் தேசிய பாதுகாப்பை கட்டியெழுப்ப இராணுவத்திற்கும் புலனாய்வுதுறைக்கும் உரிய அதிகாரங்களை கொடுப்பதுடன் இந்த நாட்டினை கட்டுப்பாடான நாடாக கட்டியெழுப்பும் வகையில் நாட்டினை பொறுப்பேற்க தயாராக உள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டங்களில் ஒன்று இன்று நிகவரட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு உரையாற்றினார்.

இந்த நாட்டினை பாதுகாப்பான நாடாக மட்டுமல்ல ஒழுக்கமான சட்டம், ஒழுங்கை சரியாக கடைப்பிடிக்கும் நாடாவும் மாற்ற வேண்டும். அதற்கான நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்த நாட்டில் இராணுவத்திற்கு உரிய அதிகாரங்களை கொடுத்து, புலனாய்வு துறைக்கான சரியான அதிகாரங்களை கொடுத்து இந்த நாட்டினை பாதுகாப்பான நாடாக மாற்ற வேண்டும். இராணுவத்திற்கும் தேசிய பாதுகாப்புக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும். அதை விடுத்தது புதிய லிபரல் கொள்கை கொண்டவர்களின் மூலமாக இந்த நாட்டினை கட்டியெழுப்ப முடியாது.

இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் அதில் இராணுவத்திற்கான பங்கு அதிகமாக இருக்க வேண்டும். எம்மால் மட்டுமே இந்த நாட்டினை கட்டியெழுப்பவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முடியும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

Related posts