அலைகள் வாராந்த பழமொழிகள் 03.10.2019

01. நீங்கள் பிரமாண்டமாக சிந்திக்கும் ஒருவராக இருந்தால் பிறர் உங்களை கௌரவப்படுத்தவில்லை என்பது போன்ற சின்ன சின்ன விடயங்களை பெரிது படுத்த மாட்டீர்கள்.

02. அற்பமான விடயங்களை சிந்தித்துப் பார்க்காமல் மாபெரும் நோக்கத்தின் மீது உங்கள் பார்வையை திசை திருப்புங்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிருங்கள்.

03. திருமணத்தை பொறுத்தவரை அமைதியும் மகிழ்ச்சியும்தான் மாபெரும் நோக்கமே அல்லாது வாய் சண்டையில் வெற்றி பெறுவதோ அல்லது நான்தான் முன்னரே கூறினேனே என்று குத்திக்காட்டுவதோ அல்ல.

04. உங்களின் கீழ் வேலை செய்யும் ஊழியரின் முழுமையான ஆற்றலை வளர்த்தெடுப்பதே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டுமே அல்லாது அவர்கள் மீது சின்ன சின்ன குறைகளை பிடிப்பதல்ல.

05. ஒரு சண்டையில் வெற்றி பெற்றுவிட்டு ஒட்டு மொத்த போரிலும் தோற்பது முட்டாள்தனம். எத்தனை போரில் தோற்றாலும் கடைசியில் ஒட்டு மொத்த போரிலும் வெல்வதே வெற்றியாகும்.

06. பிரச்சனைகளை நினைத்து மனதை அலட்டிக்கொள்ள வேண்டாம்.. நான் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்ள அது முக்கியமானது தானா என்று கேளுங்கள்.

07. பிரச்சனையான சூழ்நிலையில் இது இவ்வளவு முக்கியம்தானா என்று நம்மை நாமே கேட்டிருந்தால் 90 வீதமான பிரச்சனைகள் குறைந்திருக்கும்.

08. மகிழ்ச்சி வேண்டுமா.. அற்பமான விடயங்கள் உங்களை பாதிக்க ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

09. உங்களை ஒரு போதும் குறைவாக மதிப்பிடாதீர்கள். தன்னை தானே சிறுமைப்படுத்திக் கொள்ளும் பழக்கத்தில் இருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள திறமைகளில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் நினைப்பதைவிட நீங்கள் நல்லவர் என்பதை மறக்காதீர்கள்.

10. வெற்றி, நம்பிக்கை, மகிழ்ச்சி, இன்பம் ஆகியவற்றுக்கு உத்தரவாதமளிக்கும் நல்ல வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.

11. தோல்வி, வீழ்ச்சி, துயரம் ஆகிய காட்சிகளை கொண்டு வரும் வார்த்தைகளை தவிர்துவிடுங்கள்.

12. தற்போதைய வேலையை பெரிய கண்ணோட்டத்துடன் பாருங்கள். இந்த வேலை உண்மையிலேயே முக்கியம் என்று நினையுங்கள். அடுத்த பதவி உயர்வுக்கு இதுவே அடிப்படையாக அமையும்..

13. ஓர் அற்ப விவகாரத்தில் ஈடுபடும்போது இது உண்மையிலேயே முக்கியம்தானா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

கத்தில் படிக்க வைக்க விரும்பினால் அது படைப்பாற்றல் மிக்க சிந்தனையே.

15. தாம் வசிக்கும் தெருவில் உள்ள குப்பைகளை ஒரு குடும்பம் அப்புறப்படுத்துகிறது என்றால் அது படைப்பாற்றல் மிக்க சிந்தனையே.

16. ஆசிரியர் தன்னிடம் படிக்க வரும் மாணவர் தொகையை அதிகரிக்க விரும்பினால் அது படைப்பாற்றல் மிக்க சிந்தனையே.

17. படைப்பாற்றல் மிக்க சிந்தனை என்பது எதுவொன்றையும் செய்வதற்கான மேம்பட்ட வழியை கண்டுபிடிப்பதாகும். அனைத்து விடயங்களையும் இன்றுள்ளதைவிட சிறப்பாக செய்வதே அதுவாகும்.

18. எந்த விடயத்தை செய்தாலும் அதை செய்து முடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வளருங்கள். அதுதான் அந்த நம்பிக்கையை செயற்படுத்தும் வழியை கண்டறிய உதவும்.

19. சிறைச்சாலையை ஒழிக்க வேண்டுமானால் முதலில் ஏழ்மை நிலையை ஒழிக்க வேண்டும். ஏழ்மையே குற்றங்களுக்கு பெரும் காரணமாகிறது.

20. ஒரு விடயம் சாத்தியம் என்று நினைத்தால் மனம் அதற்கான வழிகளை உங்களுக்கு தந்து உதவுகிறது.

21. ஒன்றை செய்ய முடியும் என்று நம்புவது படைப்பாற்றலுக்குள் உங்களை கொண்டு செல்லும். முடியாது என்றால் அழிவுக்குள் தள்ளிவிடும்.

22. நிரந்தரமான உலக அமைதி அடைய முடியும் என்று நம்பாத தலைவர்கள் தோல்வியையே தழுவுவர்.

23. உங்கள் தனிப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று நம்பினால் கண்டிப்பாக அந்தத் தீர்வை தொடுவீர்கள்.

24. நீங்கள் நம்புகின்ற பெரிய வீட்டை வாங்குவேன் என்று நம்பினால் நிச்சயமாக அதை வாங்குவீர்கள்.

25. நம்புங்கள் அப்போது நீங்கள் ஆக்க பூர்வமாக சிந்திக்க தொடங்குவீர்கள்.

அலைகள் பழமொழிகள் என்ற தலைப்பில் நல்ல நூல்களின் செய்திகள் தொடர்ந்து வரும்..

அலைகள் 03.10.2019

Related posts