பலாலி விமான நிலைய புனரமைப்பு இந்திய குழு வருகை

பலாலி விமான நிலையத்தின் வசதிகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலியில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க இலங்கை சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபை முயற்சிகளை எடுத்து வருவதோடு ஒக்டோபர் நடுப்பகுதியில் விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னை, கொச்சி, மும்பை, புதுடெல்லிக்கான சேவைகள் தொடங்க பல நிறுவனங்கள் ஆர்வம் வெளியிட்டுள்ளன.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலாலி விமான நிலையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவிடமிருந்து நன்கொடைகள் கிடைப்பதற்கு சாத்தியங்கள் உள்ள போதிலும், அதுபற்றி கலந்துரையாடப்பட்டும் இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts