அரியானாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு

வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் சுமார் 19 லட்சம் பேர் விடுபட்டுள்ளனர்.

இந்த சூழலில், அசாமை போல அரியானாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். இது குறித்து மனோகர் லால் கட்டார் கூறுகையில், “ அசாமை போல அரியானாவிலும் தேசியக் குடிமக்கள் பதிவேடு நடைமுறை அமல்படுத்தப்படும். தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி பல்லாவிடம் நான் பேசினேன்” இவ்வாறு அவர் கூறினார்.

Related posts