அலைகள் வாராந்த பழமொழிகள் 12.09.2019

01. பொருளாதார வீழ்ச்சியில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக செழிப்பைப்பற்றி யோசிப்பது மிகமிக நல்லது.

02. பிரமாதமாக இருக்கிறேன் நீங்கள் எப்படியுள்ளீர்கள் என்று பதில் கொடுங்கள்.. ஏதோ காலம் போகுது என்று கூறவேண்டாம்.

03. உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் நீங்கள் அற்புதமான உணர்வை கொண்டிருப்பதாக கூறுவதை ஒரு பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

04. எப்போதும் உற்சாகமாக இருப்பவர்களை தேடியே நண்பர்கள் வருவார்கள்.

05. ஒருவர் இல்லாத நேரத்தில் அவரை சிறுமைப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

06. தினமும் உங்கள் வாழ்க்கை துணைக்கு ஒவ்வொரு பாராட்டு வழங்குங்கள்.

07. உண்மையான பாராட்டுக்கள் வெற்றிக்கான கருவியாகும். அதை அடிக்கடி பயன்படுத்துங்கள்..!

08. ஒரு நல்ல செய்தி எமக்கு ஒரு நல்ல வாய்ப்பை தருகிறது.

09. வெற்றி நமக்கே என்ற உத்தரவாதம் கொடுக்கும்போது மற்றவர்கள் கண்களில் ஒளி வீச காண்பீர்கள்.

10. பிரமாண்டமான கோட்டைகளை கட்டுங்கள் சவக்குழிகளை தோண்ட வேண்டாம்.

11. மனக்காட்சியமைப்பு எல்லாவற்றுக்குமே வலுவை கூட்டுகிறது. ஆகவே அனைத்தையும் நல்லவிதமாக பாருங்கள்.

12. ஒரு வாடிக்கையாளரை ஒரு பொருளை வைத்து முறித்துவிடக் கூடாது. அவர் ஒரு வருடத்தில் நமது கடையில் எவ்வளவு பொருட்களை வாங்கினார் என்றும் இனி எவ்வளவு வாங்குவார் என்றும் யோசித்து நடக்க வேண்டும்.

13. வாடிக்கையாளரை அதிக மதிப்பு கொண்டவர்களாக மாற்றுவது தான் அவர்களை நம்மோடு நிரந்தரமாக வைத்துக்கொள்ள உள்ள வழியாகும்.

14. எப்போதுமே நமக்கு விசாலமான பார்வை இருக்க வேண்டும். குறுகிய பார்வையை நீக்கிவிட வேண்டும்.

15. மனிதர்கள் இப்போதுள்ள அவலமான காலத்தையே பார்க்கிறார்கள். ஆனால் சிறப்பான எதிர்காலம் இருப்பதை பார்க்கத் தவறி தோல்வியிலேயே வாழ்கிறார்கள்.

16. பிரமாண்டமாக சிந்தியுங்கள் வாழ்க்கை அதற்கேற்ப பயன்தரும்.

17. ஒருவரிடம் என்ன இருக்கிறது என்பது முக்கியமல்ல அவர் எவ்வளவு பொருட்களை கைவசப்படுத்த திட்டமிட்டுள்ளார் என்பதே முக்கியமதாகும்.

18. மக்கள் நமக்கு நிர்ணயிக்கிற விலை கிட்டத்தட்ட நமக்கு நாமே நிர்ணயிக்கிற விலையை ஒத்திருக்கிறது.

19. எப்போதுமே ஒன்றின் மதிப்பை கூட்ட முயற்சி எடுங்கள்.

20. மக்களுக்கு மதிப்பை கூட்ட முயற்சி எடுங்கள். ஒருவரை உயர்த்த விரும்பினால் அவரில் உள்ள நல்லதை மனதில் காணுங்கள்.

21. நான் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா..? என்று நினைத்தால் உங்கள் மேடைப்பேச்சு தோற்றுவிடும்.

22. நாம் எதை பேசப்போகிறோம் என்பதை நாமே அறிந்திருப்பதும் அதை மற்றவரிடம் எடுத்துரைப்பதற்கான தீவிர ஆர்வமும்தான் ஒரு நல்ல பேச்சாளருக்கு தேவையான அடிப்படை தகுதியாகும்.

23. சிறந்த பேச்சாளர்களிடம் எப்போதுமே ஒரு செய்தி இருக்கும். மற்றவர் அதை கேட்க வேண்டும் என்ற தீவிர ஆர்வமும் இருக்கும்.

24. அற்பமான விடயங்களை பேச எடுக்காதீர்கள். ஓர் எதிர் தாக்குதலை நடத்தும் போது அது வேவைதானா என்று பல தடவைகள் சிந்தியுங்கள்.

25. பட்டியலில் உங்கள் பெயர் கடைசியில் இருப்பது, தாமதமாக அழைப்பு கிடைப்பது போன்ற காரணங்களை கூறி பகை வளர்க்க வேண்டாம்.

அலைகள் தன்னம்பிக்கை நூல்களின் சேகரிப்புக்கள் தொடர்ந்தும் வரும்.

உங்கள் வெற்றியே எங்கள் வெற்றி வாழ்க.

அலைகள் 12.09.2019

Related posts