தற்கொலை முயற்சி மதுமிதாவை கண்டித்த கமல்ஹாசன்

கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. கமல்ஹாசன் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. சக போட்டியாளர்கள் கொடுத்த தொல்லையால் மன அழுத்தத்தில் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். இதையடுத்து நிகழ்ச்சியில் இருந்து மதுமிதாவை வெளியேற்றினர். மேடையில் மதுமிதாவை அழைத்து கமல் ஹாசன் பேசியதாவது:- “நீங்கள் செய்த இந்த காரியம் எனக்கும், மற்றவர் களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. போட்டியாளர்களின் தைரியம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை சோதிப்பதுதான் இந்த போட்டி. ஆனால் உங்கள் கையில் நீங்கள் ஏற்படுத்திருக்கும் காயம் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணம் அல்ல. நீங்கள் செய்த இந்த காரியத்தில் நிரூபிக்கப்பட்டது உங்களது கெட்டிக்கார தனமா? முட்டாள் தனமா?.…

உலகின் மிக அழகான ஆண் : சாதனை அல்ல

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அண்மையில் உலகின் மிக அழகான மனிதர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்கும் போட்டி ஒன்றை நடத்தியது. இதற்காக நடந்த வாக்கெடுப்பில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஹாலிவுட் நடிகர்கள் கிறிஸ் எவான்ஸ், ராபர்ட் பேட்டின்சன், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பிரபலங்கள் பலரையும் தோற்கடித்து இந்த பட்டத்தை அவர் வென்றுள்ளார். இந்த மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஹிருத்திக் ரோஷனுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களையும்ம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஹிருதிக் ரோஷன் கூறும்போது, ​இது 'ப்ரோக்கோலி'யின் விளைவு, சும்மா நான் இது கேலிக்காக கூறினேன். பட்டத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் உண்மையில் ஒரு பெரிய சாதனையாக எடுத்துக் கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரை, இந்த…

ஹாங்காங் போராட்டம் : 17 லட்சம் பேர் திரண்டனர்

ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்க அனுமதிக்கும் மசோதாவை நிரந்தரமாக நீக்கக்கோரி ஹாங்காங்கில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆரம்பக்கட்டத்தில் வார இறுதி நாட்களில் மட்டும் நடந்த போராட்டம் தற்போது மற்ற நாட்களிலும் தொடர்கிறது. சென்ற வாரம் விமான நிலையத்துக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதால் கலவரம் மூண்டது. இதில் பொதுமக்கள் பலரும் காயமடைந்தனர். இதன் விளைவாக 2 நாட்கள் சர்வதேச விமானப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, தீவிரவாதிகள் போல போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டியது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் காஸ்வே பகுதியில் நேற்று நடந்த பேரணியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஹாங்காங்…

கோட்டாபய ராஜபக்ஷ மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒருவர்

நாட்டில் உள்ள சகல பிரஜைகளும் எந்தவித சந்தேகமும் இன்றி மாற்றம் ஒன்றை விரும்புவதாகவும் அந்த மாற்றத்தை ஏற்படுத்த கூடியவர் கோட்டாபய ராஜபக்ஷ எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹொக்காந்தர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சகல பிரஜைகளும் கட்சி வேறுபாடின்றி மாற்றம் ஒன்றை எதிர்பார்ப்பதாகவும், தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இரண்டு குழுக்கள் உருவாகியுள்ளதாகவும் கூறினார். நாட்டில் உள்ள நான்கு மக்கள் வர்கத்தினரும், நாட்டில் உள்ள கீழ்மட்ட மக்கள் பிரிவில் உள்ளவர்களில் இருந்து மேல் மட்டத்தில் உள்ளவர்கள் வரை அந்த மாற்றத்தை எதிர்பார்பதாகவும் கூறினார். கடந்த நான்கு வருடங்களில் நாடு முன்னோக்கி பயணிக்கவில்லை எனவும் மாறாக பின்தள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், அரசாங்கம் பிரதான மூன்று பிரச்சினைகளுக்கு பதிலளிக்க…

எந்தவொரு அரசாங்கமும் செய்யாத வேலைகளை செய்துள்ளோம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஒருவர் இல்லாத போதிலும் பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் இல்லாதிருந்தும் கடந்த 5 வருடங்களில் பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருணாகல் மாவதகம பகுதியில் அபிவிருத்தி பணிகள் சிலவற்றை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், தற்போதைய அரசாங்கத்தை எண்ணி பிரமித்துள்ளேன் காரணம் எமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை. மேலும் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையில் வேறு கட்சியை சார்ந்தவர்கள் உள்ளனர், அதனால் இந்த அரசாங்கத்தை கொண்டு செல்வது கடினம் என பலர் கூறினர். இதற்கு முன்னர் இருந்த அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது. ஆனாலும் அவர்கள் நாட்டின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாது இரண்டு வருடத்திலேயே தேர்தல் ஒன்றுக்கு சென்றனர். ஆட்சி கிடைத்தால்…

ரணில் ஒரு குள்ள நரி, அவர் தமிழர்களுக்காக எதையும் செய்யமாட்டார்

இராணுவ தளபதியாக இருந்து தமிழ் மக்களை அழித்த சரத்பொன்சேகாவிற்கு யுத்தம் முடிந்து ஒருவருடத்தில் வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறியிருந்தார்கள். அவ்வாறான இராணுவ தளபதிக்கு வாக்களிக்கலாம் எனின் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏன் வாக்களிக்க முடியாது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்தியகுழு கூட்டம் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கட்சி காரியாலயத்தில் கட்சியின் செயலாளர் வி.கமலதாஸ் தலைமையில் நேற்று (18) இடம்பெற்றது இதில் கலந்துகொண்ட கட்சி தலைவர் வி.முரளிதரன் (கருணா அம்மான்) கட்சியின் பெண்கள் அணிதலைவி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், இளைஞர்அணி தலைவர், தேசிய அமைப்பாளாகளுக்கான பதவிகளை உத்தியோக பூர்வமாக வழங்கிவைத்த பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொது ஜனபெரமுன கட்சியுடன்…