முரளிதரன் படத்தில் இருந்துவிஜய் சேதுபதி விலகல்?

கிரிக்கெட் வீரர் முரளிதரன் படத்தில் இருந்து விலகுவது குறித்து விஜய் சேதுபதி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரின் வாழ்க்கை திரைப்படங்களாக வந்தன. கபில்தேவ் உலக கோப்பையை வென்றதை வைத்து ‘83’ என்ற பெயரில் படம் தயாராகிறது. இதுபோல் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கையையும் படமாக எடுக்கின்றனர். முரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்துக்கு ‘800’ என்ற தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி டைரக்டு செய்கிறார். விஜய் சேதுபதி கூறும்போது, “உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் முத்திரை பதித்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது” என்றார். ஆனால் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி…

கிராமத்து கதையில் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் ‘தர்பார்’ படத்தை அடுத்து நடிக்கும் திரைப்படம் கிராமத்து கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வந்த ‘காலா’ படத்தை ரஞ்சித்தும், ‘2.0’ படத்தை ஷங்கரும் இயக்கி இருந்தனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ‘பேட்ட’ படம் ஜனவரியில் திரைக்கு வந்தது. இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடிக்கிறார். இதில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். படப்பிடிப்பு மும்பை பகுதியில் 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த படத்துக்கு பிறகு தனி கட்சி தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபடுவாரா? அல்லது மீண்டும் நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஏற்கனவே மும்பை படப்பிடிப்புக்கு…

தற்­போ­தைய அரசு சர்­வ­தே­சத்­துடன் இணைந்தே என்னை தோற்­க­டித்­தது

சர்­வ­தேச சக்­தி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து 2015ஆம் ஆண்டு என்னை தோல்­வி­யடையச் செய்த தற்­போ­தைய அர­சாங்கம் நாட்­டையும் நாட்டு மக்­களின் பாது­காப்­பையும் கேள்­விக்­கு­றி­யாக்­கி­விட்­டது என்று எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம் பெற்ற தாக்­குதல் தொடர்பில் சுயா­தீன விசா­ரணை ஒன்றை நடத்­து­வ­தற்­கான கோரிக்­கை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார். மொரட்­டுவை மாந­கர சபையின் புதிய கட்­டட தொகு­தியை புதன்­கி­ழமை திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்­குதல் தொடர்பில் சுயா­தீ­ன­மான விசா­ரணை வேண்டும் என்று பேராயர் வேண்­டுகோள் விடுக்­கின்றார். அதனை ஏற்­றுக்­கொண்டு சுயா­தீ­ன­மான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் அடை­யாளம் காணப்­படவேண்டும் என்­ப­துடன் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­படவேண்டும். பொது எதி­ர­ணியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், உள்­ளூராட்சி மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் தலை­வர்கள்…

அமைச்சர் மங்கள தலைமையிலான விசேட குழு இன்று யாழ். விஜயம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெறவுள்ளது.நிதியமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட குழு இன்று யாழ் செல்லவுள்ளது. தொழில் முயற்சியாளர்கள் 10 இலட்சம் பேரை உருவாக்கும் நோக்கில் நிதியமைச்சால் நடத்தப்பட்டு வரும் எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி, கருத்திட்டத்தின் மூன்றாவது தேசிய நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இக்காண்காட்சி நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளதுடன் வடக்கில் பிரதான மாவட்டமான யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இந்தக் கண்காட்சி செப்டெம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு இந்த கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளது. அதற்கான தெளிவுபடுத்தல், அனுபவப் பகிர்வு உள்ளிட்ட விழிப்புணர்வுகள் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 134 மில்லியன் ரூபா வங்கிப் பணம் இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சந்தேக நபர்களின் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ----- தீவிரவாதி சஹ்ரான் குழுவினால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் என சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் பின் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இறந்த அஸ்ரிபாவின் கணவர் ஜாசிர் என்பவர் கண்ணீருடன் தெரிவித்தார். கடந்த 85 நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்ட பின்னர் கல்முனை நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பிணையில் விடுதலையான ஜாசிர் என்பவர் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 26 சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற அசம்பாவித…