2025 ஆம் ஆண்டிற்குள் சகலரது வீட்டுப் பிரச்சினைக்கும் தீர்வு

2020-, 2025ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைவரது வீட்டுத் தேவைகளுக்கும் தீர்வை பெற்றுத்தருவேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாசதெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

வீடமைப்புப் பணிகள் ஒரே அமைச்சின் கீழ்தான் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பகுதி பகுதிகளாக பிரித்து வெவ்வேறு அமைச்சின் கீழ் வீடமைப்புப் பணிகள் கையளிக்கப்பட்டுள்ளதால் அதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகுவார்கள்.

தனிப்பட்ட ஆசைகளை பூர்த்திசெய்யும் நோக்கில் வீடமைப்புப் பணிகளை ஆறு அமைச்சின் கீழ் பிரித்துக் கொடுத்துள்ளனர்.

தெற்கில் உள்ளவர்கள் வேறு திசைக்கும், வடக்கில் உள்ளவர்கள் வேறு திசைக்கும் வீடுகளை பெற்றுக்கொள்ள செல்ல வேண்டியுள்ளது.

அனர்த்தம் ஏற்பட்டால் மற்றுமொரு திசையை நோக்கி ஓட வேண்டியுள்ளது.

வீடமைப்புப் பணிகள் ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும் 2020-, 2025ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் நாட்டில் வீட்டுத் தேவையுடைய அனைவருக்கும் வீடுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படும் என்றார்.

Related posts