கொலைகளுக்கு உத்தரவிட்டவர்கள் யார்?

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படு கொலை, எக்னெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை, கீத் நொயார், உபாலி தென்னகோன் ஆகிய ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் போன்றவற்றுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்ற விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ளது. லசந்த விக்ரமதுங்க கொலை தவிர்ந்த ஏனைய சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் என கூறப்படும் இராணுவ புலனாய்வாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களே லசந்த கொலையுடனும் தொடர்புபட்டுள்ளதாக சி.ஐ.டி. சில சான்றுகளை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. இந் நிலையில் அந்த புலனாய்வாளர்களுக்கு குறித்த ஊடகவியலாளர்களுடன் எவ்வித தனிப்பட்ட பகைமையும் இல்லை என்பதை உறுதி செய்துள்ள சி.ஐ.டி. யாரின் தேவைக்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து தீர்க்கமான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றங்களுக்கு அறிவித்துள்ளனர்.

சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது

நடிகர் சூர்யா பேசியதே பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளதாக, காப்பான் இசை வெளியீடு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் “காப்பான்” பட இசை வெளியிட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய வைரமுத்து, “ இந்த விழாவில் பங்கேற்றுள்ள ரஜினி பொருளை மட்டும் பகிர்ந்து கொடுப்பவர் அல்ல, தன் புகழையும் பெருந்தன்மையையும் பகிர்ந்து கொடுப்பவர். சினிமாத் துறையில் உள்ளவர்கள் தங்கள் பணிக்கு சம்பளம் வாங்குகிறோம். அதோடு சமூகத்திற்கும் அவர்களுக்குமான உறவு முடிந்துவிட்டதாக நினைக்காது, எனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்” என்று கூறினார். பாடலாசிரியர் கபிலன் பேசுகையில், “புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா…