7 பேர் விடுதலை 2 வாரத்தில் பதில் ..!

7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் கேட்டு 2 வாரத்தில் பதில் தருகிறோம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க அரசுக்கு 2 வாரம் அவகாசம் தேவை என மனுவில் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து தமிழக அரசுக்கு 2 வார கால அவகாசம் அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

——————

12-ம் வகுப்பு புதிய பாடப்புத்தகத்தில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் குறித்த சுவாரசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. சிவாஜி கணேசனைப் பற்றி மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ‘ சிதம்பர நினைவுகள்’ என்ற நூலை எழுதினார்.சிதம்பர நினைவுகள் நூலின் பெரும்பகுதி 12-ம் வகுப்பு பொதுத்தமிழ் பாடத்தில் இடம் பெற்றுள்ளது.

—————-

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி 23-ம் தேதி படப்பிடிப்புகளை ரத்து செய்ய விஷால் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து நடிகர்களும் வாக்களிக்க வசதியாக படப்பிடிப்புகளை ரத்து செய்ய வேண்டும் என விஷால் கூறியுள்ளார்.

————–

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர். தமிழகத்தில் கடும் வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை, வெயிலின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், புதிய பாடத்திட்டத்தின் படி உரிய காலத்தில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டியுள்ளதால் விரைவாக பள்ளிகளை திறந்து பாடங்களை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தனியாரையும், முன்னாள் பள்ளி மாணவர்களுக்கும் அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதில் குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவையும் அடங்கியுள்ளது. கழிப்பிடங்கள் போதிய அளவில் இல்லாத நிலையில், கழிப்பிடம் இருக்கும் சில பள்ளிகளில் தண்ணீர் வசதியும் இல்லை.

இதுபோன்ற சூழலில் தற்போது வறட்சியும் சேர்ந்துள்ளதால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் எப்படி இதை எதிர்கொள்வார்கள் என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். வெயிலின்தாக்கம் இன்னும் குறையவில்லை, மேலும் 5ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால் அன்று பள்ளிகளுக்கும் விடுமுறை நாளாக இருக்கிறது. பின்னர் 6,7 தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும். அதற்கு8,9ம் தேதிகள் விடுமுறை நாளாக இருக்கிறது.

அதனால் 10ம் தேதி பள்ளிகள் திறந்தால் மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது என்றும் பெற்றோர் தெரிவித்தனர். மாணவர்கள் நலன் கருதி, பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறைக்கும், அரசுக்கும் முன்வைக்கப்பட்டது. ஆனால் அரசுஅதை நிராகரித்துவிட்டு, திட்டமிட்டபடி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களும் பாடபுத்தகங்கள், சிருடைகள் இன்று வழங்க திட்டமிட்டுள்ளது.

Related posts