அலரிமாளிகையில் நடைபெறுவது என்ன ?

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியார் தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்றுவருகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அனைத்து முஸ்லிம் தலைவர்களுக்கிடையிலேயே குறித்த கலந்துரையாடல் தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்று வருகின்றது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதிவியிலிருந்து ஜனாதிபதி விலக்க வேண்டும் அல்லது அவர்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் எனக் கோரியும் அவர்களை குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்குட்படுத்த வேண்டும். எனக் கோரியும் கண்டியில் அதுரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்திலீடுபட்டு வருகின்றார்.

அத்துடன் அமைச்சர் ரிஷாத், மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடன் பதவி நீக்கி குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்குட்படுத்த வேண்டும். இல்லையேல் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts