இன்றைய முக்கிய இலங்கை செய்திகள் 30.05.2019 வெள்ளி

புத்தளம் – திருகொணமலை வீதியில் சிங்காரகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஒன்றும் கொள்கலன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியில் பயணித்த ரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

கலகரபேவ, நொச்சியாகம பிரதேசத்தைச் ​சேர்ந்த 48 வயதுடைய கணவன், மனைவி மற்றும் 12 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கொள்கலன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

—————-

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் பொய்த் தகவல்களை வழங்கியமை தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் இன்று இதனை நீதிமன்றத்தில் தெரிவித்ததாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

————-

ஈஸ்டர் தாக்குதல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என அநேகமானோர் கவலையடைந்தார்கள். நாம் இது தொடர்பாக மிகவும் அவதானத்துடன் இருந்தோம். ஆனால் எமது பொருளாதாரத்துக்கு அவ்வாறான பாரிய இழப்பு ஏற்படவில்லையென அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் தற்போது மக்களின் வாழ்வும், பொருளாதாரமும் சாதாரண நிலைமைக்கு திரும்பியுள்ளன. தற்போது செய்ய வேண்டியதெல்லாம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாகும் என்றார்.

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்தாலும் அம்முயற்சிகள் அனைத்தையும் தோல்வியடையச் செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அனைத்து பாராளுமன்ற, மாகாண மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்: ஏப்ரல் 21ஆம் திகதியிலிருந்து இதுவரை நாம் எடுத்த முடிவுகளால் ஒரு மாதத்திற்குள் ஐ. எஸ். ஐ. எஸ். தீவிரவாதிகளை பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்ய முடிந்துள்ளது. இவ்வாறு குறுகிய காலத்தில் ஐ. எஸ். ஐ. எஸ். தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டது உலகிலேயே ஒரு சில சந்தர்ப்பங்களில் மாத்திரம்தான்.

பாடசாலைகள் நடைபெறுவதை தடுக்க சிலர் முயற்சி செய்தாலும் தற்போது பாடசாலைகள் வழமைபோல் இயங்குகின்றன. அது போல் முஸ்லிம், கத்தோலிக்க மதஸ்தலங்களில் வழமைபோல் வழிபாடுகள் இடம்பெறுகின்றன. வெசாக் கொண்டாட்டங்களும் விஹாரைகளில் மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. தற்போது நாட்டில் நிலைமை சீராகியுள்ளது. ஆகவே நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதாரத்தில் சில பிரிவுகளில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. அதற்கு அநேகமாக நாட்டில் அடிக்கடி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதும் ஏற்பட்ட கலவரங்களாலும் மக்கள் தமது இயல்பு வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தார்கள். இதன் காரணமாக வர்த்தக சந்தையின் கொடுக்கல், வாங்கல் மற்றும் விற்பனை வீழ்ச்சி அடைந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களில் சாதாரண நிலைமைக்கு மெல்ல மெல்ல திரும்பியுள்ளன.

இக்காலப் பகுதியில் சில வர்த்தகர்களுக்கு தங்களது கடனை செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் அவர்களுக்கு குறுகிய கால சலுகைகளை வழங்க நாம் வங்கிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஈஸ்டர் தாக்குதல் காரணமாக ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்படவில்லை. உற்பத்தித்துறைகள் தமது நடவடிக்கைகளை வழமைபோல் நடத்தி வருகின்றன.

இத் தாக்குதலினால் பெருமளவு பாதிப்படைந்தது சுற்றலாதுறையாகும். பல வெளிநாடுகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதற்கு தமது மக்களுக்கு தடைகளை விதித்திருந்தன. தற்போது இந்தியா, சீனா, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகள் அத்தடையை நீக்கியுள்ளன. மேலும் சில நாடுகள் இலங்கைக்கு பயணம் செய்வதில் சில ஒழுங்கு விதிகளை வித்து தடையை நீக்கியுள்ளன.

————–

இலங்கையிலுள்ள மாணவர்கள் பலர், உடல் பருமன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தரம் 5 இல் 100 மாணவர்களில் 7 பேர் என்ற அடிப்படையிலும், தரம் 10 இல் 100 மாணவர்களில் 5 பேர் என்ற அடிப்படையிலும் மாணவர்கள் உடல் பருமனினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உடல் பருமன் நோய்க்கு உள்ளாகும் மாணவர்கள் இருதய நோய், ஈரல் நோய், சுரப்பித் தொகுதி பிரச்சினை, என்புத் தொகுதி பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.

ஆகவே, உடல் பருமன் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட முடியாவிடின், எதிர்கால இலங்கை சமூகம், சுகாதார மற்றும் பொருளாதார ரீதியில் பாரிய விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும், சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

————

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த 20 புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலியாவின் கார்டியன் ஊடகம் தெரிவித்துள்ளது.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகு இலங்கைக்கு கடந்த வாரம் திருப்பி அனுப்பப்பட்டதை அந்நாட்டு உள்விவகார திணைக்களம் மற்றும் பிரதிப் பிரதமர் Michael McCormack ஆகியோரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள், கொழும்பிற்கு திருப்பி அனுப்ப்ப்பட முன்னர் சில நாட்கள் கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

மே முதல் வாரத்தில் குறித்த படகு அவுஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

————–
ஐ.எஸ்.அமைப்­புக்கு எதி­ராக யாழ்ப்­பா­ணத்தில் நாளை வெள்­ளிக்­கி­ழமை ஆர்ப்­பாட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

யாழ்ப்­பாணம் ந­கரில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சல்­களின் ஏற்­பாட்டில் இந்த ஆர்ப்­பாட்டம் ஐந்து சந்திப் பகு­தியில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

யாழ்ப்­பாணம் – மானிப்பாய் வீதியில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சலில் நாளை வெள்­ளிக்­கி­ழமை நண்­பகல் கூடும் இஸ்­லா­மி­யர்கள், ஐ.எஸ்.­ஐ.எஸ். அமைப்­புக்கு எதி­ரான பதா­தை­களை ஏந்­தி­ய­வாறு பேர­ணி­யாக ஐந்து சந்­திக்குச் சென்று அங்கு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள னர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட தற்­கொ­லைக்­குண்டுத் தாக்­கு­தல்­களில் 250இற்கும் மேற்­பட்ட அப்­பாவிப் பொது­ மக்கள் கொல்­லப்­பட்­ட­துடன், 500இற் கும் மேற்­பட்ட பொது­மக்கள் படு­கா­ய ­ம­டைந்தனர்.

இந்தத் தாக்­ கு­தல்­க­ளுக்கு சிரி­யாவைத் தள­மாகக் கொண்ட சர்­வ­தேச பயங்­க­ர­வாத இயக்­க­மான ஐ.எஸ்.ஐ.எஸ். உரிமை கோரி­யி­ருந்­தது. அத­னை­ய­டுத்து புத்­தளம் உள்­ளிட்ட நாட்டின் சில இடங்­களில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புக்கு எதி­ராக முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நாளை வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

———-

கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் கர்ப்பினிப் பெண் உட்பட 10 பேர் வெட்டிப் படுகாயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்படுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.இதனபோது வாள்வெட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரு வாள்கள், கூரிய ஆயுதங்களும் சில, கெப் ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வரும் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts