இன்றைய முக்கிய சினிமா செய்திகள் 27.05.2019

பல்வேறு ஹீரோயின்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர் ஆர்யா. யாரும் செட்டாகவில்லை. தனக்காக பெண் பார்க்கும் படலத்தையும் நடத்தினார். அதிலும் யாரும் சிக்கவில்லை. விஷால், ஆர்யா இருவரும் நண்பர்கள். இருவரில் முதலில் திருமணம் செய்வது யார் என்ற போட்டியும் இருந்தது. அந்த வகையில் விஷாலை முந்திக்கொண்டார் ஆர்யா. கஜினிகாந்த் படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த சாயிஷாவை காதலித்து மணந்தார் ஆர்யா.

வரும் அக்டோபர் 9ம் தேதி விஷால் தனது காதலி அனிஷாவை மணக்கிறார். எதிர்பாராத வகையில் நட்சத்திர தம்பதிகளாக மாறியிருக்கும் ஆர்யா, சாயிஷா தங்களது நடிப்பு தொழிலையும் தொடர முடிவு செய்திருக்கின்றனர். திருமணத்துக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படமாக டெடி உருவாகிறது. படத்தில் ஆர்யா, சாயிஷா காதல் ஜோடிகளாக நடிக்க உள்ளனர்.

ஷக்தி ராஜன் இப்படத்தை இயக்குகிறார். இதன் தொடக்க விழாவும் நடந்து விட்டது. திருமணத்துக்கு பிறகு ஆர்யா, சாயிஷா நட்சத்திர தம்பதி இணைந்து நடிக்கும் படமாக ‘டெடி’ உருவாகவிருக்கிறது. கடந்த மாதம் நட்சத்திர தம்பதிகள் சமந்தா, நாக சைதன்யா இணைந்து நடித்த மஜ்லி தெலுங்கு படம் வெளியாகி ஹிட்டானது. அந்த பாசிடிவ் வைப்ரேஷன் ஆர்யா, சாயிஷா தம்பதிக்கும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

———

விஸ்வாசம் படத்தில் உடல் தோற்றத்தை குண்டாக்கி, பெப்பர் சால்ட் தோற்றத்தில் நடித்த அஜீத் அடுத்து போனிகபூர் தயாரிக்கும் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இதில் கோட்டு சூட்டு அணிந்து தனது தோற்றத்தை டிப் டாப்பாக காட்டியிருக்கிறார். புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார் அஜீத்.

இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க இயக்குனர் கேட்டுக்கொண்டதையடுத்து ஜிம்மிலேயே கிடந்து தனது உடல் எடையை நிறையவே குறைத்திருக்கிறார். 90களில் பார்த்ததுபோல் தற்போது கனக்கச்சிதமாக உடல்தோற்றத்தை வடிவமைத்திருக்கும் அஜீத் அந்த தோற்றத்துடன் வெளியிடங்களில் நடமாடத் தொடங்கியிருப்பதாக அவருடன் புகைப்படம் எடுத்துவரும் தல ரசிகர்கள் அப்படங்களை நெட்டில் பரப்பி வருகின்றனர்.

————

தளபதி விஜய் ஒவ்வொரு ஆண்டும் உழைப்பாளர் தினத்தன்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்தளிப்பார். ஆனால் இந்த ஆண்டு தேர்தல் காரணமாக நேற்று முன்தினம் விருந்தளித்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ளவில்லை. தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத கால்பந்தை விளையாட்டை மையமாக கொண்ட படத்தில் நடித்து வருகின்றார்.

நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த பிரமாண்ட விருந்தில் எப்போதும் நேரடியாக கலந்து கொள்ளும் விஜய், இந்த முறை படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவர் கலந்துகொள்ளவில்லை.

———–

நடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறி இஸ்லாம் பெண்ணை மணந்தார். இந்நிலையில் சிம்புக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் அவருக்கு வீட்டில் பெண் பார்த்துவிட்டதாகவும் தகவல் வெளி வந்த வண்ணமிருக்கிறது. இதையறிந்த சிம்பு என்னது எனக்கு கல்யாணமா என்று திடுக்கிட்டு அவசர அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை, அதுபற்றி உரிய நேரத்தில் முறைப்படி அறிவிப்பேன். வதந்திகளை உண்மை என நம்பி ரசிகர்கள் ஏமாறுகிறார்கள். எனவே என் புது படம் மற்றும் திருமணம் பற்றி முறைப்படி நானே அறிவிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார் சிம்பு.

Related posts