சஹ்ரானின் சகோதரரான மொஹமட் கைது

தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவரும் கொழும்பு, சங்கரில்லா ஹொட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவருமான மொஹமட் சஹ்ரானின் சகோதரரான மொஹமட் இப்ராஹிம் மொஹமட் இப்தான் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தெமட்டகொடை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கைதுசெய்யும்போது அவரிடமிருந்து இரு வாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ——— முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் யாழ்.நாவாந்துறை மற்றும் ஐந்துசந்திப் பகுதிகளில் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரையில் மேற்கொள்ளப்பட்ட ‍சுற்றிவளைப்பின்போது பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இதன்போது, கார் ஒன்று மீட்கப்பட்டதுடன், பெரிய அளவிலான தேயிலைப் பைக்கற்றுகள் மூன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.