சமூக ஊடகங்களை முடக்கியது சரியா?

கொழும்பு உட்பட இலங்கையின் பல இடங்களில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பாக முறையான விசாரணையை தொடங்குவதற்கு முன்னதாகவே, இந்தச் சம்பவம் குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் இலங்கை முழுவதும் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டன. அதன்படி ஏப்ரல் 21ஆம் திகதி இரவு தொடங்கி ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்சப், யூடியூப், ஸ்னாப்சேட், வைபர் போன்றவற்றின் சேவைகள் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் ட்விட்டர் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும், போலிச் செய்திகளின் பரவலும் குறைவு என்பதால் அதன் சேவை முடக்கப்படவில்லை. குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான போலிச் செய்திகள் பரப்பப்படுவதை தடுப்பதற்காக சமூக ஊடகங்கள் முடக்கப்படுவதாக இலங்கை அரசாங்கம் கூறினாலும், இணையத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் தங்களது திட்டத்தை செயல்படுத்துவதற்கோ அதுகுறித்த தகவல்களை வெளியிடுவதற்கோ அவர்களுக்கு களம் அமைத்து கொடுத்து விடக் கூடாது…

தோட்டா மீட்பு தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

இன்று (30) காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டமை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பில் தமக்கு எவ்வித சம்பந்தும் இல்லை என தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள ஊடக அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காத்தான்குடியிலுள்ள தனது காரியாலயம் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, அங்கு மீட்கப்பட்ட 40 தோட்டாக்களும், தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டதென அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இது தொடர்பில் உரிய அதிகாரிகள் பொலிசாருக்கு உரிய அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை குறித்த அலுவலகத்தில் இருந்து கைது செய்யப்பட்ட இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கனடா வீசா தொடர்பாக வெளிவரும் செய்திகள் வடிகட்டிய பொய் எச்சரிக்கை

கடந்த சில தினங்களாக சிறீலங்காவில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததும் கனடாவுக்கு வீசா இல்லாமல் போகலாமென சில ஊடகங்கள் புரளி கிளப்பிவிட்டன. இது முற்றிலும் பொய் செய்தி. சமூக வலைத்தளங்களிலும் இது வெளியானது. கவனத்தை தொடுவதற்காக பொய் செய்திகளை வெளியிட ஆரம்பித்திருக்கும் ஊடகங்கள் பல சிந்தனையில் வங்குரோத்தடைந்து வருவதால் இப்படி பிழைக்க முற்பட்டுள்ளன என்ற வருத்தமும் சமூக ஆர்வலரிடையே இருக்கிறது. இது குறித்து வெளியான செய்தி வருமாறு : இலங்கையை சேர்ந்த மக்கள் எவ்வித விசாவும் இன்றி கனடா வரலாம் என்ற செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 21 ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளில் இதுவரை 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான பல்வேறு…

கல்முனை தற்கொலை தாக்குதல் ஐ.எஸ் பொறுப்பேற்றது

சிறீலங்காவில் இன்று முதல் பர்தா அணிய தடை... சக்ரனின் தந்தையும் இரு மகன்களும் மரணம்... இந்திய உளவுப் பிரிவும் களமிறங்கியது.. அலைகள். 29.04.2019