பெரு நாட்டின் முன்னாள் அதிபர் தலையில் துப்பாக்கியால் சூடு..

இப்போது கோமா நிலையில்.. மூன்று தடவைகள் நின்று மீண்டும் அடித்தது இதயம்.. ஊழல் குற்றச்சாட்டில் கைதாக முன் கதையை முடிக்க முயன்றார்.. ஊழல் தலைவர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. அலைகள் 17.04.2019

தமிழகத்தின் சிறு கட்சிகளால் ஏன் திராவிடத்தை வீழ்த்த முடியாது..?

குருவிச்சை கட்சிகளாகவே இவை இருக்கின்றன.. ஒரு தலைவரே உண்டு அவர் இறந்தால் இன்னொருவர் இல்லை.. வாக்கு வங்கி அளவில் பணம் வேண்டுவதே இவர்களில் பலரது வேலை.. அலைகள் 17.04.2019

சூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படம் ஆகஸ்டில் வெளிவர உள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயிஷா ஆகியோர் நடித்துள்ள படம் காப்பான். இந்த படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது. அரசியல், பயங்கரவாதம் பற்றிய காட்சிகள் டிரெய்லரில் உள்ளன. விவசாயியாக வரும் சூர்யா, நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து ஆவேசமாக பேசுகிறார். “இயற்கையாக உற்பத்தியாகும் நதியை தனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது” என்று ஆவேசமாக பேசுகிறார். விவசாயிகள் போராட்டம் கலவரமாக மாறி பலர் ரத்த வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகளும் டிரெய்லரில் உள்ளன. சூர்யா உழவு மாடுகளை பிடித்தபடி ஏர் கலப்பையுடன் வரும் காட்சியும் உள்ளன. படத்தில் மோகன்லால் பிரதமராக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. ‘சியாச்சின், கார்க்கில் அடுத்து சர்ஜிக்கல் அட்டாக். இதைத்தான் விரும்புகிறதா? உங்கள் பாகிஸ்தான் என்று மோகன்லால்…

இந்திய தேர்தல் 2019 செய்தி துணுக்குகள்

ஆண்டிப்பட்டியில் ரூ.1.48 கோடி பறிமுதல் செய்தது தொடர்பாக வருமானவரித்துறை அறிக்கை அனுப்பியது. பணம் பறிமுதல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு வருமானவரித்துறை அறிக்கை அனுப்பியது. வார்டு எண்கள் குறிப்பிட்டு 97 கவர்களில் இருந்த பணத்தை வருமானவரித்துறை பறிமுதல் செய்தது. தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வருமானவரித்துறை அறிக்கை அனுப்பியது. ----------- பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது போல் வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் நடந்துகொள்கிறது என்று சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதிமுக, பாஜகவுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை; காழ்புணர்ச்சியினால் எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார். ----------- சாத்தூர் அருகே எதிர்க்கோட்டையில் உள்ள அமமுக வேட்பாளர் சுப்பிரமணியன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சுப்பிரமணியன் அலுவலகம், தோட்டத்தில் இருந்து…

தேர்தல் 2019 நாளை காலை, மதிய சினிமா காட்சிகள் ரத்து

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி திரையரங்குகளில் நாளை காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், 18 சட்டமன்ற தொகுதியிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்து தயார் நிலையில் உள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க 160 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் 1.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தலில் நூறு சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தேர்தல்…

சண்டையா… சமாதானமா? கோதாவில் ஹீரோக்கள்

கோலிவுட்டில் பிரபல நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் போது கடும்போட்டி நிலவுவதுண்டு. இதனால் ஏதாவது ஒரு படம் ஹிட்டாகி வசூலை அள்ளுவதும், மற்றொரு படம் வசூல் குறையும் நிலை யும் இருக்கிறது. சமீபகாலமாக அந்த போட்டியை தவிர்க்கும்போக்கு ஹீரோக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பாகுபலி பிரபாஸ் நடித்த சாஹோ படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது. அதேநாளில் சூர்யா நடித்துள்ள காப்பான் படமும் வெளி யாவதாக அறிவிக்கப்பட்டது. கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் ஆர்யா, சாயிஷா போன்றவர்கள் நடித்திருப்பதுடன் பெரிய பட்ஜெட்டில் படம் தயாராகியிருக்கிறது. தற்போது போட்டி நிலை மாறியிருக்கிறது. பிரபாஸ் படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாவதால் காப்பான் பட ரிலீஸ் ஆகஸ்ட் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதேபோல் அஜீத் நடிக்கும் நேர் கொண்ட பார்வையும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக…

கைவிடப்படுகிறதா ‘இந்தியன் 2 கமல் பேச்சால் குழப்பம்

கமல் வெளியிட்ட வீடியோவில் பேசியிருக்கும் வார்த்தைகளை வைத்துப் பார்த்தால், 'இந்தியன் 2' படம் கைவிடப்பட்டதாகவே தெரிகிறது. மீண்டும் கமல் - ஷங்கர் இணைப்பில் தொடங்கப்பட்ட படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் தயாரிக்க, படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கினார்கள். ஆனால், சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது எப்போது மீண்டும் படப்பிடிப்பு என்பதற்கு எவ்வித பதிலுமே சொல்ல முடியாமல் நிற்கிறது படக்குழு. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் கமல். இதனால், மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று (ஏப்ரல் 16) மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் கமல். அது அவருடைய கட்சி சார்ந்த விளம்பரமாக இருந்தாலும், அதில் ”நான் உசுறா நினைத்த தொழிலை விட்டுவிட்டு இங்கு வந்தால்...” என்று தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டுள்ளார் கமல். இந்த…