புதிய தோற்றத்தில் சல்மான்கான்

இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். ஒரு படத்துக்கு ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். ஒரு படத்துக்கு ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். 53 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்களும் வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சல்மான்கானுக்கு அந்த கட்சி அழைப்பு விடுத்தது. அதை அவர் நிராகரித்து விட்டார். தனது டுவிட்டர் பக்கத்தில் “ஒவ்வொரு இந்தியரும் வாக்களித்து அதன்மூலம் புதிய அரசை தேர்ந்தெடுப்பதில் அனைவரும் பங்களிப்பை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் சல்கான்கான் இந்தியில் நடித்து வரும் ‘பாரத்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி இருந்தது. இதில் கத்ரினா கைப், திஷா பதானி, தபு ஆகியோரும்…

கனவை நனவாக்க முயற்சிக்கும் இனியா!

ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் சாரதி சதீஷ் தயாரிப்பில், அறிமுக டைரக்டர் சாய் கிருஷ்ணா டைரக்‌ஷனில், முக்கிய வேடத்தில் இனியா நடித்துள்ள படம், ‘காபி.’ காபி படத்தை பற்றி டைரக்டர் சாய் கிருஷ்ணா கூறியதாவது:- “ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோர் களை இழந்து விடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு சமாளித்து, தனது கனவை நனவாக்க முயற்சிக்கிறார். தன் தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறார். இனி சுபிட்சமாக வாழலாம், கஷ்டங்கள் தீர்ந்து விடும் காலம் வந்து விட்டது என்று நம்பிய வேளையில், எதிர்பாராத அதிர்ச்சியான சம்பவம் நடக்கிறது. அதை அவர் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறு கிறார்? என்பதே கதை. நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு…

போலீஸ் அதிகாரி-இளவரசியாக2 வேடங்களில் ஆண்ட்ரியா!

கதாநாயகனுடன் மரத்துக்கு மரம் ஓடிப்பிடித்து விளையாடும் கதாநாயகியாக நடிப்பதில் உடன்பாடு இல்லாதவர், ஆண்ட்ரியா. கனமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘வடசென்னை’ படமே இதற்கு சாட்சி. வெற்றிமாறன் டைரக்‌ஷனில் வெளிவந்த அந்த படத்தில் பழிவாங்கும் மனைவியாக, ‘சந்திரா’ என்ற வடசென்னை பெண்ணாக நடித்து, மிரட்டியிருந்தார். இதைத்தொடர்ந்து கதாநாயகியை மையப்படுத்திய கதையம்சம் கொண்ட ‘மாளிகை’ என்ற படத்தில், ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்த படத்தில் அவர் 2 வேடங்களில் நடிக்கிறார். துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரி மற்றும் இளவரசி ஆகிய இரண்டு வேடங்களில் அவர் நடித்து வருகிறார். தில் சத்யா டைரக்டு செய்கிறார். இவர் சில கன்னட படங்களை இயக்கியிருக்கிறார். “இது, ஒரு பழிவாங்கும் பேய் படம். இதில், ஆண்ட்ரியா மிகுந்த ஆர்வத்துடன் நடித்து வருகிறார். தொடர்ந்து இதுபோன்ற கனமான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன்”…

வேலூர் மக்களவை தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிரடி

வேலூர் தொகுதிக்கான மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், ஆம்பூர், குடியாத்தத்தில் இடைத்தேர்தல் அறிவித்தபடி நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் நடக்கிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்வதாக…

யாழில் மின்னல் தாக்கியதில் மூன்று சகோதரர்கள் பலி

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (16) பகல் 2.30 மணியளவில் கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினாலேயே குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள புகையிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த இரு பெண்களும், ஒரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த புகையிலை தோட்டத்தில் நால்வர் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒருவர் உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். ஏனைய மூவரும் வேலைசெய்து கொண்டிருந்த போது திடீரென மழை பெய்த காரணத்தினால் அருகில் இருந்த தென்னை மரத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் ஒதுங்கியுள்ளனர். இதன் போது மின்னல் குறித்த தென்னை மரத்தின் மீது தாக்கியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 49 வயதுடைய திருநாவுக்கரசு கண்ணன், 55…

நம் நாட்டின் சிறந்த நடிகர் சூர்யா

நம் நாட்டில் சிறந்த நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்கிறார்'' என்று 'சூரரைப் போற்று' தமிழ்த் திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் மும்பையைச் சேர்ந்த குனீத் மோங்கா பாராட்டியுள்ளார். தமிழில் 'இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரைப் போற்று' புதிய தமிழ்த் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழின் முன்னணி நடிகர் சூர்யாவும் மலையாளத்திலிருந்து அனுபமா பாலமுரளியும் நடிக்கிறார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குனீத் மோங்கா சூர்யா பற்றியும் திரைப்படம் பற்றியும் கூறியதாவது: "தமிழ் சினிமாவில் எங்கள் பயணத்தைத் தொடங்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் படமான 'சூரரைப் போற்று'வில் சூர்யாவைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது. நம் நாட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவராகத் திகழும் சூர்யா, தேசியச் சின்னமாவார். தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கும் எனது கன்னிமுயற்சியில் சூர்யா மற்றும் ராஜ்சேகர்,…

ட்ரம்ப் ரகசியங்களை வெளியிட்ட பத்திரிகைகளுக்கு புலிட்சர் விருது

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்த 'நியூயார்க் டைம்ஸ்', 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' ஆகிய பத்திரிகைகளுக்கு இந்த ஆண்டு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'நியூயார்க் டைம்ஸ்', 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' ஆகிய இரு பத்திரிகைகளும் வெவ்வேறு புலனாய்வுகளை மேற்கொண்டு ட்ரம்ப் மற்றும் ட்ரம்ப் குடும்பத்தினரைப் பற்றிய சில உண்மைத் தகவல்களை வெளிக்கொணர்ந்தன. நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை தனது புலனாய்வு மூலம், தன்னிடம் உள்ள சொத்துகள் அனைத்தும் தானே சம்பாதித்தது என்ற ட்ரம்ப்பின் கூற்று பொய் என நிரூபித்ததற்காகவும் அவரது மாபெரும் வணிக சாம்ராஜ்யம் மிகப்பெரிய அளவில் வரிஏய்ப்புக்கான சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி வந்ததை நிரூபித்ததற்காகவும் மதிப்புவாய்ந்த பத்திரிகை விருது வழங்கப்படுவதாக நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் புலிட்சர் விருதுக்குழு அறிவித்துள்ளது. மேலும், 2016-ல் அதிபர் தேர்தல் பிரச்சார காலகட்டத்தில் இரு பெண்களுடன்…

தமிழகத்தில் அதிகரிக்கும் ஓட்டுக்கு பணம் வழங்கும் நடைமுறை

தமிழகத்தில் அதிகரித்துவரும் ஓட்டுக்கு பணம் வழங்கும் ‘கீழ்த்தரமான செயலுக்கு’ எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை கவனத்துடன் பரிசீலித்து நடவடிக்கை எடுங்கள் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் கடந்த மாதம் 29,30 தேதிகளில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. அதன்பின் இம்மாதம் 1 மற்றும் 2-ம் தேதி துரைமுருகனுக்கு நெருங்கிய உறவினரும் திமுக பகுதிசெயலாளருமான பூஞ்சோ சீனிவாசனின் சகோதரி வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனையில் ரூ.11 கோடியே 48லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்தது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கே.கே. ரமேஷ் என்ற சமூக ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்…

இந்தியா தேர்தல் 2019 ஓர் அலசல்

தமிழக அரசியல் களத்தில் அனைத்துக் கட்சிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போவது யார்? மற்ற தேர்தல்களிலிருந்து இந்த தேர்தல் என்ன வித்யாசப்படுகிறது ஒரு அலசல். 1950-ம் ஆண்டுகளில் இந்தியா குடியரசு ஆன பின்பு நடந்த பொதுத்தேர்தலும் அதை ஒட்டிய தேர்தல்களிலும் வாக்காளர் மனநிலை தேசபக்தி என்கிற அளவிலும், உள்ளூர் பிரமுகர்கள், தனவந்தர்கள் என்கிற அளவிலும் இருந்தது. அதன்பின்னர் பல மாறுதல்கள் மாநில, மொழி அரசியல் என வாக்காளர்கள் மனநிலை பிரிந்தது. வாக்காளர்கள் மன நிலையை தீர்மானிப்பதில் பல புறக்காரணிகள் அவ்வப்போதைய விஞ்ஞான வளர்ச்சியை ஒட்டி அமைந்தது. மொழி, இனம், மதம், சாதி, கலை போன்றவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியலில் வாக்குகளைப் பிரித்த வெற்றிகரமான அரசியல் தலைவர்கள் இந்தியா முழுவதும் இருந்தனர். இதில் மேற்கண்ட அம்சங்களில் இளம் வாக்காளர்களும் அதிகம் ஈர்க்கப்பட்டு வாக்களித்தனர். தமிழகத்தில் 1950-களில் காங்கிரஸ், முஸ்லிம் லீக்,…

தூத்துக்குடி பணப் பட்டுவாடா : கனிமொழியும், தமிழிசையும்

ஸ்டெர்லைட் கலவரம், துப்பாக்கிச் சூடு சோகம் என்ற அடையாளத்தை எல்லாம் தாண்டி சமீபநாட்களாக தூத்துக்குடியின் அடையாளமாக கனிமொழியும், தமிழிசையும் மட்டும்தான் செய்திக்கான மூலமாக இருக்கின்றனர். அதிமுக சார்பில் கூட்டணிக் கட்சி பாஜகவின் தமிழிசை, திமுக சார்பில் கனிமொழி, அமமுக சார்பில் டாக்டர் புவனேஸ்வரன். ஸ்டெர்லைட் பிரச்சினை மட்டும்தான் திமுகவின் துருப்புச் சீட்டு. அது கச்சிதமாகp பலனளித்திருக்கிறது. அதனாலேயே பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்றும்கூட வெற்றி வாய்ப்பு திமுக வேட்பாளர் கனிமொழிக்கே அதிகமாக இருக்கிறது. தொடங்கிய இடத்திலேயே முடிக்கும் வைகோ... இறுதி நாளான இன்று கனிமொழி ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், எட்டயபுரம் பகுதிகளில் பிரச்சாரம் செய்துவிட்டு கோவில்பட்டியில் பிரச்சாரத்தை முடிக்கிறார். கோவில்பட்டியில் வைகோ உரையுடன் கனிமொழியின் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. வைகோ 2019 தேர்தல் பிரச்சாரத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் தான் தொடங்கினார். இன்று தனது பிரச்சாரத்தை தூத்துக்குடியிலேயே நிறைவு செய்கிறார்…