வை.கோவுக்கு கொள்கையாவது கத்தரிக்காயாவது.. பழனிச்சாமி

தேர்தல் பிரச்சாரத்தின்போது மதிமுக தலைவர் வைகோவை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாகச் சாடினார். விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் போட்டியிடுகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, நேற்று மாலை விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் ராவணனை ஆதரித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், ''விழுப்புரத்தில் வைகோ பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். தன் இஷ்டம் போலக் கொள்கைகளையும் மாற்றிக்கொள்வார்; நிலைப்பாட்டையும் மாற்றுவார். அந்தக்கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகிப் போய்விட்டது. பருப்பு கொள்முதலில் ஊழல், நெடுஞ்சாலையில் ஊழல் என எந்தெந்தத் துறைகள் எல்லாம் நியாபகத்துக்கு வந்ததோ, அவை அனைத்தையும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். ஏற்கெனவே ஒன்றுமில்லை. இவ்வளவு தரம் தாழ்ந்து, ஒரு கட்சியை வைத்துக்கொண்டே அடுத்த கட்சியின் சின்னத்தில் நிற்கிறார்கள். இவரெல்லாம்…

ரியூப் தமிழ் நான்கு மாடி கட்டிடம் இரண்டு வார வளர்ச்சி

ரியூப் தமிழ் ஊடக இல்லம் நான்கு மாடி கட்டிடத்தை அமைக்கும் பணிகள் இரவு பகல் பராமல் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. தாயகத்தில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட இளையோருக்கு சொந்தக் காலில் நின்று பணியாற்ற அமைக்கப்படுகிறது இந்த சர்வதேச தரத்திலான கட்டிடம். முதலாவது தளம் கடைத்தொகுதி.. இப்போதே அனைத்து கடைகளும் வாடகைக்கு போய்விட்டன.. இரண்டாவது மாடி.. காணொளி ஊடக தளம்.. மூன்றாவது மாடி.. ரியூப்தமிழ் வானொலி.. நான்காவது மாடி மாநாட்டு மண்டபமும் தங்கும் அறைகளும்.. அடுத்த ஆண்டு ஐந்தாவது மாடி வருகிறது.. புலம் பெயர் இளையோர் தாயக இளையோர் நல்லுறவு மையம்.. போரின் வடுக்களை அகற்றுவோம்.. நாம் வீடு கட்டினோம்.. டாக்டரானோம்.. கார் வாங்கினோம் என்பதில் பெருமை கிடையாது.. நம்மை விட சிறப்பாக நம் தாயக மக்கள் வாழ வழி செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்தப்…

டென்மார்க் கலைஞர் சங்கம் நடத்தும் திரையிசை நடனப்போட்டி

டென்மார்க் கலைஞர் சங்கம் இந்த ஆண்டு நடத்தவுள்ள முப்பெரும் விழாக்களில் முதலாவது திரையிசை நடனப்போட்டி எதிர்வரும் 09 ஆனி மாதம் நடைபெற இருக்கிறது. கேர்னிங் நகரில் உள்ள இல: 7 கலாச்சார இல்லத்தில் வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது. இது நடனக் கலைஞர்களுக்கும் திரையிசை நடன ஆர்வலருக்கும் அரியதோர் வாய்ப்பாகும். அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தத்தமது ஆற்றலை காட்ட வேண்டியது முக்கியமாகும். ஆடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்.. அழகான வர்ண விளக்குகளில் ஜாலங்களில்.. அற்புதமான துல்லியமான இசையோடு.. அளவோடு மக்களை கூட்டி தெளிவாக கண்களுக்கு தெரியும்படியாக செய்து.. கலையில் தேர்ந்த பலர் ஒன்று கூடி முன்னெடுக்கும் பெரு நிகழ்வு.. இது விளையாட்டல்ல.. சுவை பொருந்திய நிகழ்வு என்பதை மறந்துவிடாதீர்கள்.. அலைகள் 30.03.2019

விமானம் விழுந்தது எப்படி.. Wall Street Journal தகவல்

எதியோப்கிய விமானம் விழுந்தமைக்கு எம்.சி.ஏ.எஸ் சிஸ்ரத்தில் இருந்த குறைபாடே காரணமாக இருக்கலாம் என்று முதலாவது செய்தி வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் வேள் ஸ் ரீற் யேணல் முதலாவது தகவலை கசிய விட்டிருக்கிறது. எம்.சி.ஏ.எஸ் சிஸ்ரம் புதிய வகை சாப்ற்வெயர்.. இது விமானத்தை தானியங்கி மூலம் சமநிலைப்படுத்தும் தானியங்கி ஏற்பாடு. M- Maneuvering C- Characteristics A- Augmentation S- system இதன் சென்சார்களில் ஏற்பட்ட பிழை விமானத்தை தரையில் மோத வைத்துள்ளது. இப்போது புதிய முறை அமலுக்கு வரவுள்ளது. விமானி தானே இயக்கும்படியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக போயிங் இரண்டு விபத்துக்களில் 346 பேரை பலி கொடுத்து இந்தப் பாடத்தை படித்துள்ளது. அக்டோபர் 29 இந்தோனீசிய லயன் எயார் விழுந்தபோது கண்டு பிடித்திருக்க வேண்டும். இப்பொழுது வேள் ஸ் ரீற் யேணல் எம்.சி.ஏ.எஸ் சிஸ்ரம் பிழைத்ததே காரணமாக இருக்கலாம்…

வெற்றிகரமான 100 வயதை தொட்ட பெண்மணி என்ன சொல்கிறார்

டென்மார்க்கில் 100 வது பிறந்த நாளை கொண்டாடும் ருய்ரா என்ற பெண்மணியின் தொலைக்காட்சி நிகழ்ச்சி இன்று இரவு 20.45 மணிக்கு டென்மார்க் தொலைக்காட்சி சேவை 1 ல் ஒளிபரப்பாக இருக்கிறது. ருய்ரா என்ன இந்தப் பெண்மணி 1918 நவம்பர் 28ம் திகதி பிறந்திருக்கிறார். அவருடைய பிறந்த நாள் ஞாபகத்தில் இன்றும் இருக்கிறது. தனது 100 வயது அனுவபத்தில் இவர் என்ன சொல்கிறார்.. 01. கடந்த காலம் திரும்பி வராது.. 02. நான் மறுபடியும் குழந்தையாக முடியாது.. 03. எனது பிள்ளைப் பருவத்துடன் ஒப்பிட்டால் இன்று உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. 04. எனது பாடசாலை காலம் மகிழ்வானது ஆனால் எல்லோரும் திக்கு திக்காக போய்விட்டோம். 05. இந்த இனிய நாட்கள் மறுபடியும் வராது என்று நினைத்து இந்த நாளை மகிழ்வுடன் வாழ வேண்டும். 06. இன்று எல்லாமே வேகமாகப்…