யார் குற்றம் இழைத்திருந்தாலும் உள்ளக விசாரணை?

விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் பாதுகாப்புப் படையினர் ஆகிய இருதரப்பிலிருந்து யார் குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் உள்ளக நீதிக்கட்டமைப்பின் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அந்தவகையில் ஜெனீவா கூட்டத்தொடரில் எமது கொள்கைகளைத் உறுதிபடக்கூறி, நாட்டின் உள்ளகக் நீதிக்கட்டமைப்புக்களில் நம்பிக்கை உள்ளது எனத் தெளிவுபடுத்தியிருப்பதன் மூலமாக டி.எஸ்.சேனாநாயக்கவின் கொள்கைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல எம்மால் முடிந்துள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

டீ.எஸ்.சேனாநாயக்கவின் 61 ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts