இலங்கை சுதந்திரதினம் எப்படி நடந்தது இலங்கையில் வெளியான தினகரன் செய்தி

இலங்கை சுதந்திரத்தை வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் கரி நாளாக அறிவித்துள்ளனர். ஆனால் சிறீலங்காவில் சிறந்த நாளாக அறிவித்துள்ளனர். இது சிறீலங்காவின் பார்வை.

இலங்கையின் 71ஆவது தேசியதின பிரதான நிகழ்வு கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில்நேற்றுக் காலை மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

இம்முறை தேசிய தின பிரதான நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று வெளிநாட்டு விஷேட அதிதியாக மாலைதீவின் புதிய ஜனாதிபதியான இப்றாஹிம் மொஹம்மட் சொலிஹ் அவரது பாரியார் திருமதி பஸ்னா அஹமட் சகிதம் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.

அத்துடன்,பிரதமர் ரணில் விக்ரமசிங்க,சபாநாயகர் கரு ஜயசூரிய,முன்னாள் ஜனாதிபதியும் எதிர் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, பிரதமநீதியரசர் நலீன் பெரேரா, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிரஅபேவர்தன, மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி, மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள் உட்படமுக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு தேசியதின நிகழ்வை சிறப்பித்தனர்.

தேசிய தின மரியாதை அணிவகுப்பில் ஐயாயிரத்திற்கும் அதிகமான முப்படைவீரர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் கலந்து கொண்ட அதேசமயம், இம்முறை கடற்படை மற்றும் விமானப் படையின் சாகசங்கள் கண்கவர் வகையிலும் பார்ப்போரை ஆச்சரியப்படுத்தக் கூடிய வகையிலும் அமைந்திருந்தன. உள்நாட்டு பிரமுகர்கள் மாத்திரமன்றி வெளிநாட்டு அதிதிகள் மற்றும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மிகவும் சுவாரஷ்யமாக சாகசங்களை பார்வையிட்டதையும், புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்ததையும் காணக்கூடியதாக இருந்தன.

தேசியதின பிரதான நிகழ்வை முன்னிட்டு கொழும்பு காலி முகத்திடல் உட்பட அதனை அண்டிய பிரதேசம் எங்கும் தேசிய கொடிகள் மற்றும் வர்ணக் கொடிகள் பறக்கவிடப்பட்டு அந்தப் பிரதேசம் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டதுடன் பிரதேசம் எங்கும் முப்படை மற்றும் பொலிஸார் விஷேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

காலை 8.00 மணி தொடக்கம் பாதுகாப்பு மற்றும் சிவில் நிர்வாகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரிஅட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறிபெர்னாண்டோ, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரட்ன ஆகியோரின் வருகை இடம்பெற்றது. இவர்கள் தமது பாரியார் சகிதம் வருகை தந்தனர்.

காலை 8.30 தொடக்கம் விஷேட பிரமுகர்களின் வருகை இடம்பெற்றது. இதற்கமைய மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, மேல் மாகாண ஆளுநர் அசாத் ஸாலி, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன, பிரதம நீதியரசர் நலின் பெரேரா, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் தமது பாரியார் சகிதம் வருகை தந்தனர்.

முன்னாள் ஜனாதிபதியும் எதிர் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் வருகையைத் தொடர்ந்து பொலிஸ் விஷேட வாகன பவனிக்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியாரின் வருகையும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இலங்கை மற்றும் மாலைதீவு தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்ட காரில் வாகன பவனிக்கு மத்தியில் மாலைத்தீவு ஜனாதிபதி இப்றாஹிம் மொஹம்மட் சொலிஹ் அவரது பாரியார் திருமதி பஸ்னா அஹமட் சகிதம் வருகைத் தந்தார். அத்துடன் பொலிஸ் விஷேட வாகன பவனி மற்றும் குதிரைப் படை புடைசூழ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது பாரியார் திருமதி ஜயந்தி சிறிசேனவின் வருகை இடம்பெற்றது.

மங்கள மேள முழக்கத்திற்கும் சங்கொலிக்கும் மத்தியில் தேசிய கொடியை சம்பிரதாய முறையில் ஏற்றி தேசிய தின பிரதான நிகழ்வை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். 11 பாடசாலைகளைச் சேர்ந்த 110 மாணவ, மாணவிகளால் ஆரம்பத்தில் சிங்களமொழி மூலமும் இறுதியில் தமிழ் மொழி மூலமும் தேசியகீதம் இசைக்கப்பட்டன.

ஜயமங்கள கீதம் மற்றும் தேவோ வஸ்து பாடப்பட்டதை தொடர்ந்து இலங்கையின் சுதந்திரம், இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றை நிலை நாட்டும் பொருட்டு தாய் நாட்டிற்காக உயிர் நீத்த தேசாபிமானிகளை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கானமரியாதை அணிவகுப்பு இடம் பெற்றதுடன் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து காலி முகத்திடலிருந்து நாட்டு மக்களுக்கு விஷேட உரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்தினார். சுமார் அரை மணிநேரம் ஜனாதிபதியின் உரை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு மணித்தியாலமாக முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு, வான், கடல் சாகசங்கள் மற்றும் கலாசார பாரம்பரிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

முன்னாள் இராணுவ ஊடகப் பேச்சாளரும் முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் 59ஆவது படைப்பிரிவின் தற்போதைய கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, தேசியதின முப்படை பிரதான அணிவகுப்பின் கட்டளை தளபதியாகவும் இராணுவ கொமாண்டோபடையணியைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியந்தசேனாரத்ன இரண்டாவது கட்டளைஅதிகாரியாகவும் அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

தேசியதின பிரதான நிகழ்வின் மரியாதை அணிவகுப்பில் இம் முறை சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான முப்படைவீரர்கள் கலந்து சிறப்பித்தனர். இதில் சுமார் 3620 இராணுவ வீரர்கள், சுமார் 1249 கடற்படை வீரர்கள், சுமார் 830 விமானப் படைவீரர்கள், சுமார் 800 பொலிஸ், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர், சுமார் 505 சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 100 தேசிய இளைஞர் படையினரும் அடங்குவர்.

பொலிஸ், விஷேட அதிரடிப் படை

பொலிஸாரின் அணிவகுப்பில் மிகவும் பழைமை வாய்ந்ததும் பாரம்பரியமிக்கதுமான பொலிஸ் பேன்ட வாத்தியபிரிவுடன், பொலிஸ் குதிரைப்படையுடன் அணிவகுத்து சென்றது. அதனைத் தொடர்ந்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அணிவகுத்தும் சென்றனர். போலிஸ் குதிரைப் படைக்கு மேலதிகமாக விஷேட பிரமுகர் வாகனபவணி,சீ. சீ. ரீ. விபிரிவினர்களின் அணிவகுப்பும் இடம்பெற்றது.

இம்முறை தேசிய தின நிகழ்வில் பரசூட் படையினரின் சாகசங்களை பார்யாளர்களை மெய்சிலிக்கவைத்ததுடன் அனைவராலும் பேசப்பட்டது. வழமைக்கு மாற்றமாக பல்வேறு விதமான சாகசங்கள் காண்பிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும். முதற் தடiவாய ‘பேஸ் ஜம்ப்’ சாகசம் காண்பிக்கப்பட்டன. காலி முகத்திடலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சங்கரில்லாஹோட்டலின் 52ஆவது மாடியிலிருந்து குதித்து ஒருதரப்பினர் சாகசங்களை காண்பித்தனர். மற்ற தரப்பினர் சுமார் 10 ஆயிரம் அடிஉயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து குதித்த அவர்கள் சுமார் 4000 அடிஉயரத்திலிருந்து கூட்டாகவும் தனித்தனியாகவும் தேசிய மற்றும் முப்படைகளின் கொடிகளை ஏந்தியவண்ணம் சாகசங்களை காண்பித்தவாறு பார்வையாளர்களில் வரவேற்புக்கு மத்தியில் தரையை வந்தடைந்தனர்.

கலாசாரநிகழ்வு

இம்முறை அணிவகுப்பில் கலாச்சார நிகழ்வு மற்றும் நடனங்கள் முக்கிய இடத்தைபெற்றது. எமதுநாட்டின் பாரம்பரியத்தையும் சகல இன கலாசாரத்தை பிரதிபலிக்கும் வழக்கம் போன்று சிங்கள, தமிழ் மற்றும் இஸ்லாமிய பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றதுடன் இம்முறை உள்ளுர் விவசாயத்துறைக்கும், தேயிலை உற்பத்தித்துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொழுந்துபறித்தல் நடனம், நெல் விதைத்தல்,உரல்களில் அரிசிகுத்தல் அறுவடைசெய்தல் போன்றவை நடனமாகவும் செய்கையின் மூலமும் காண்பித்துசென்றனர்.

இவ்வாறு சென்றமை இலங்கையர்களை விட வெளிநாட்டு பிரமுகர்களுக்கும் தூதுவர்களுக்கும் சுவாரிஷ்யமானதாகவும் கண்வரக் கூடியதாகவும் இருந்ததுடன் விஷேடமாக வெளிநாட்டு தூதுவர்கள் புகைப்படம் எடுத்துமகிழ்ந்ததையும் காணமுடிந்தது.

இலங்கையின் பல்குழல் தாக்குதல் இயந்திரம்

முப்படை அணிவகுப்புக்களின் போது அவர்கள் பயன்படுத்தும் வெளிநாட்டு தயாரிப்பு யுத்தஉபகரணங்கள் வாகனங்கள் காண்பிப்பது வழக்கம். இம்முறை முதற் தடவையாக இலங்கையின் தயாரிப்பு பல்குழல் தாக்குதல் ஆயுதம் அணிவகுத்து சென்றது. பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால் முதற் தடவையாக 120 மிமீரகபல்குழல் தாக்குதல் (மல்டி பரல்) இயந்திரமே இம்முறை அணிவகுப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டது இது இலங்கை முன்னேற்றத்திற்கு ஒருஎடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.

Related posts