சட்டத்தோடு விளையாட வேண்டாம் கார்த்தி சிதம்பரத்திற்கு நீதிமன்று எச்சரிக்கை.

சட்டத்தோடு விளையாட வேண்டாம் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் நாங்கள் கடும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டி இருக்கும் என்று கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தபோது மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு மத்திய வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.

அதற்கு பிரதிபலனாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு ரூ 305 கோடி முறைகேடாக பணம் வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கிலும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெளிநாடு செல்ல நீதிமன்றம் அளித்த உத்தரவை கார்த்தி சிதம்பரம் தவறாக பயன்படுத்துவதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் வழக்கை தாமதப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் மீதான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமைக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் இதுபற்றி நீதிபதிகள் கூறும் பொழுது “ சட்டத்தோடு விளையாட வேண்டாம் கார்த்தி சிதம்பரம் அவர்களே!சட்டத்துடன் விளையாடினால் கடவுள் மட்டும் தான் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும். நாங்கள் கடும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிவரும், நாங்கள் சொல்வதற்கு நிறைய உள்ளன இப்போது அவை வேண்டாம், நீங்கள் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் ” என்று எச்சரித்தனர்.

எனினும் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் ஈடுபடுவதால் உச்ச நீதிமன்றம் அங்கு செல்ல அனுமதி அளித்தது.

” ஆனால் நீதிமன்றத்தில் 10 கோடி பிணை செலுத்த வேண்டும், மேலும் வெளிநாட்டில் இந்தியாவுக்கு திரும்ப வருவேன், விசாரணைக்கு ஒத்துழைப்பு என்ற உறுதிமொழியை எழுத்து மூலமாக கார்த்தி சிதம்பரம் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

” மாசி பத்தாம் திகதி முதல் 26ம் திகதி வரை எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் ஆனால் விசாரணைக்கு கண்டிப்பாக ஒத்துழைக்கவேண்டும் மார்ச் 5 6 7 மற்றும் 12-ம் தேதிகளில் அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் ” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Related posts