உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் முல்லைத்தீவில் வழங்கும் நிகழ்வு

போரினால் பெரும் பாதிப்பிற்குள்ளான மாவட்டம் முல்லைத்தீவு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அங்கு மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் குரவல் மகாவித்தியாலயத்திற்குள் நுழைகிறோம். மாணவர்களுக்கு குடி நீர் வழங்கும் தொட்டியை அமைத்துக் கொடுக்கவும், கூடவே அறிவு மேம்பாட்டிற்காக உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற ரியூப் தமிழ் வெளியீடு புத்தகத்தையும் வழங்க நேற்று முன்தினம் ரியூப் தமிழ் இளையோர் அணி முல்லைத்தீவு சென்றது.

அத்தருணம் பாடசாலை மாணவர்களுக்கு ரியூப்தமிழ் பத்திரிகைகளும் வழங்கப்பட்டன. முல்லைத்தீவில் மிகவும் பின்தங்கிய பகுதியில் கடற்தொழிலை ஆதாரமாகக் கொண்ட குரவல் மகாவித்தியலயத்தை சென்றடைந்தது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கூடவே நமக்கிருக்கும் பாரிய கடமைகளையும் எடுத்துரைத்தது.

இன்றைய நாகரிக உலகின் தகவல்கள் எதுவும் போய் சேராத தொலைவில் அந்த மாவித்தியாயலயம் அமைந்திருந்தது. தேவைகள் எதுவும் பூர்த்தி செய்யப்படாமல், குடி நீர் சேகரித்து வைக்கக்கூட ஒழுங்கான தண்ணீர் தொட்டியின்றி காணப்பட்டது.

டென்மார்க்கில் உள்ள அன்ரன் தோமாஸ், ஜெசிந்தா தம்பதியரின் திருமண நாள் பரிசாக வாங்கப்பட்ட தண்ணீர் தொட்டியையும், டென்மார்க் வாழ், கிறீன்ஸ்ரெட், பிலுண்ட் நகர மக்களின் உதவியால் வழங்கப்படும் புத்தகங்களையும் கொண்டு சென்றோம்.

அந்த மாணவர்களை சந்தித்தது, அவர்கள் கைகளில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் உதைபந்தாட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை வழங்கியபோது பிள்ளைகள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

ஒவ்வொரு உலகப் புகழ் பெற்ற வீரனும் எவ்வாறு இலக்கை தொட்டார்கள் என்பதை இந்தப் பிள்ளைகள் படிக்கும்போது ஏற்படும் விளைவு கண்களுக்குள் பிரகாசமாக தெரிகிறது. தாயகத்தில் இப்போது வேண்டியது தன்னம்பிக்கை..! அந்தக்காலத்தில் நமக்கு தராது மறைக்கப்பட்டு பணக்காரரின் பிள்ளைகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட தகவல்களை எல்லாம் ஏழைகள் அறிய செய்ய காடு, கரம்பை எல்லாம் தாண்டி ஓடுகிறோம்.

மேலும் பல பின்தங்கிய பகுதிகளை நோக்கி அடுத்த வாரமும் புறப்படுகிறோம்.. அதற்கு அச்சாரமாக இது தொடர்பான காணொளியை காணுங்கள்.

அலைகள் 26.01.2019 சனிக்கிழமை

Related posts