ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் என்று வெளியான செய்தி

ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் என்று வெளியான செய்திக்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்

பிரபல நடிகை ஸ்ருதிஹாசனும் பிரிட்டிஷ் நாடக நடிகர் மைக்கேல் கார்சலேவும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொள்வார்கள்.

டிசம்பர் 20-ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக்கேல் கார்சலேவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன், ”என்னைச் சிரிக்க வைப்பவன் நீ. இந்த உலகிலேயே அதுதான் மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து 2019-ல் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது தமிழில் சன் குழும தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றிணை மட்டுமே தொகுத்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

2019-ல் ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் என்றை செய்தியை மேற்கோள் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “அப்படியா? இதுவே எனக்கு செய்தி தான்” என்று கிண்டலாக பதிலளித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

Related posts