டென்மார்க் எல்லையில் 6.144 தஞ்சம் கோருவோர் திருப்பி அனுப்பப்பட்டனர்

ஐரோப்பிய ஒன்றிய எல்லைப்புறத்தில் போக வர தளர்வுகள் இருந்தாலும் இப்போதெல்லாம் டென்மார்க் எல்லைக்குள்ளால் சரியான கடவுச்சீட்டு காண்பிக்காமல் உள்ளே போக முடியாது.

காரணம் தஞ்சம் கோருவேரை கட்டுப்படுத்த சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பாக எல்லைப்புற பரிசோதனை, கடவுச்சீட்டு பரிசோதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி இதுவரை டென்மார்க்கிற்குள் தஞ்சம் கோரி வந்தோரில் 6.144 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 801 பேர் ஆயுதங்களுடன் வந்து குற்றவாளிகளாயினர். மேலும் 5.479 பேர் ஆயுதம், போதைவஸ்த்து, ஆட்கடத்தல் போன்ற பலவிதமான குற்றச்சாட்டுக்களில் தடுக்கப்பட்டுள்ளனர்.

நாட்டிற்குள் அளவுக்கு அதிகமாக தஞ்சம் கோருவோர் வருவதால் இடைக்கால தடையாக போடப்பட்ட இந்த எல்லைப்புற கட்டுப்பாடானது காலத்திற்கு காலம் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.

அப்படியே நீண்டு நீண்டு இன்று மூன்றாவது ஆண்டு நிறைவை வந்தடைந்துள்ளது. ஆகவேதான் இந்த மதிப்பீட்டு செய்தி எழுதப்படுகிறது.

இவ்வாறு எல்லையில் நின்று போலீவர் வழி மறிப்பது செங்கன் ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றிய திறந்த எல்லைக்கான ஒப்பந்தங்களை மீறும் செயல் என்று விமர்சனங்கள் உண்டு.

2015 – 16 ஆண்டுகளில் அதிகமாக தஞ்சம் கோருவோர் வந்த காரணத்தினால் இப்படியான சட்டத்தில் ஓர் அர்த்தம் இருந்தது. ஆனால் இப்போது வெள்ளம் போல தஞ்சம் கோருவோர் பெருக்கம் இல்லை, இருப்பினும் கண்காணிப்பு தொடர்கிறது.

கண்காணிப்பை நிறுத்தினால் அடுத்த மணித்தியாலம் கொட்டுப்பட ஆரம்பித்துவிடும் தொகை என்பதை சொல்ல வேண்டியதில்லை.

மேலும் இப்படி காவல் செய்த காரணத்தினால் 379 ஆயுதங்கள் அகப்பட்டுள்ளன. 3.694 பேர் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர்.

முன்னர் இதை எதிர்த்த டேனிஸ் மக்கள் இப்போது எதிர்ப்பது குறைவாக உள்ளது. ஆகவே டேனிஸ் அரசு எடுத்த முடிவு சரிபோலவே தெரிகிறது.

அலைகள் 04.1.2019 வெள்ளி

Related posts