தாயகத்தில் தமிழர் நடுவம் உதவிகளுடன் வந்தது

தமிழர் நடுவம் இன்று தமிழகத்தில் கவனத்தைத் தொடும் அமைப்பாக வேகமாக உருவாகி வருகிறது. புரட்சி சிந்தனையாளர் செல்வா பாண்டியர் உயிர் கொடுத்து உருவாக்கிய இந்த அமைப்பு தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் தனது கால்களை ஆழமாக பதித்து வருகிறது.

யாழ்ப்பாணத்தில் காரியாலயம் அமைக்குமளவுக்கு வளர்ந்த தமிழகத்தின் அமைப்பாகவும் அது தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் வடக்கே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் பணிகளை நடுவம் முடுக்கிவிட்டுள்ளது.

நேற்று ரியூப் தமிழுடன் இணைந்து நடுவத்தின் உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இன்றும் வழங்கப்படுகின்றன. உலகளாவிய தமிழ் நேசத்துடன் செயற்பட நடுவம் எடுக்கும் முயற்சிகள் பரந்துபட வளர்ந்து வருகிறது.

சென்ற வாரம் மலேசியாவில் தமிழர் தேசியம் என்ற கருத்தியல் கொண்டு முக்கிய மாநாடு வெற்றிகரமாக நடந்துள்ளது. தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நடுவத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது.

இலங்கை தமிழ் மக்களுக்கான தனது உதவிகளை தமிழகத்திலும் நடுவம் விஸ்த்தரிக்க இருக்கிறது.

மலேசியாவில் டென்மார்க் எழுத்தாளர் கி.செ.துரை எழுதிய புத்தகங்களை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இலங்கையில் இருந்து தமிழர் நடுவ பிரதிநிதி மலேசியா சென்றுள்ளார். மலேசிய இலங்கை நட்புறவு விரிவாக்கம் பற்றிய சந்திப்புக்கள் இடம் பெற்றன.

சிங்கப்பூரில் இருந்து நடுவத்தின் முக்கிய உறுப்பினர் நாகேஷ் முத்துபாண்டி நிகழ்வில் பங்கேற்றார். மலேசியாவில் இயற்கை மருத்துவர், சமுதாய முன்னோடிகளுக்கு நூல்கள் வழங்கப்பட்டன.

அலைகள் 26.12.2018 புதன்

——————————

மலேசிய மாநாடு குறித்து தமிழர் நடுவம் வெளியிட்ட அறிக்கை வருமாறு :

நேற்று (23-12- 2018) திருச்சியில் தெலுங்கர்களின் தலைமையில் தமிழினத்திற்கும் தமிழின மீட்சிக் கருத்தியலான தமிழர் தேசியக் கருத்தியலுக்கும் ஏதிராக கருப்புச் சட்டை பேரணி என்று ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்….

அப்பேரணியின் முடிவில் திராவிட, கம்யூனிச, தமிழ்த் தேசிய முகமூடி அணிந்த தெலுங்கின தலைமைகளின் முன்னிலையில் தமிழர் உரிமை மீட்பு மாநாடு என்ற ஒன்றையும் நடத்தியிருக்கிறார்கள்….

திராவிட கழகமும் 200க்கும் மேற்பட்ட அதன் அடிப்பொடி சில்லரை இயக்கங்களும் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிரான சதித்திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான், இத் தமிழின பகை சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் இராஜதந்திர காய் நகர்தல் ஒன்றை மலேசியாவில் “தமிழர் ஒற்றுமை மாநாடு” என்ற பெயரில் தமிழர்களம் மலேசியாவும் தமிழர் நடுவமும் இணைந்து பிரம்மாண்டமாக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது…..

“தமிழர் தேசியம்” எனும் தமிழின மீட்புக் கருத்தியலை வழங்கியதற்காக தமிழர் தேசியத் தந்தை அவர்களை கொளரவிக்கும் விதமாக விலைமதிப்பில்லா கேடயம் ஒன்றை மலேசிய தமிழர் களம் நடுவத்திற்கு வழங்கியது. அதை எமது அமைப்பாளர் நாகேஷ் பாண்டியர் பெருமையுடன் பெற்றுக் கொண்டார்…

மாநாட்டு நிகழ்வில் இளைஞர்களின் தன்னம்பிக்கையையும் அரசியல் அறிவையும் வளர்க்கும் “உலகப்புகழ் பெற்ற 10 உதைபந்தாட்ட வீரர்கள்” மற்றும் “ஹிலரி கிளின்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா” எனும் நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழின இளைஞர்களுக்கு பரிசளிக்கப்பட்டன….

மாநாட்டில் தமிழர் களம் மலேசியாவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எழிலன் மற்றும் தமிழ்ப்புகழ் குணசேகர பாண்டியரும் நடுவத்தின் அமைப்பாளர் நாகேஷ் பாண்டியர் அவர்களும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்…..

நிகழ்வில் சிறப்புரையாக தமிழர் தேசியத் தந்தை அவர்கள் மறைந்தும் தமிழினத்திற்காக காணொளியாக பேருரையாற்றி “அழிவில்லாதவன்” ஆக நினைவு கூறப்பட்டு நிலைத்து நின்றார்….

தமிழர்களின் அரசியல் என்பது இனி தமிழ்நாட்டில் அல்ல உலக அரங்கில் தான் எனும் படிப்பினையை ஈழ இனப்படுகொலை மூலம் விளங்கிக் கொண்ட எமது நடுவம், உலகம் முழுவதும் தமிழர்களின் உயிர் குடிக்கும் விசச்செடி போல தமிழர்களுக்கிடையே பரவியுள்ள இந்த வடுக திராவிட சித்து விளையாட்டுகளை களைகளைப் பிடுங்குவது போல பிடுங்கி எறிந்து வரலாற்றுக் சுழற்ச்சியை நிகழ்த்தி வருகிறது…..

வெல்க தமிழர்…..!

வாழ்க தமிழரினம்…!!

இவண்,
தமிழர் நடுவம்

தமிழர்நடுவம்

Related posts