எல்லைச் சுவர் குறித்து ட்ரம்ப்புடன் பேசவில்லை மெக்சிகோ அதிபர்

எல்லைச் சுவர் குறித்து அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடந்தவில்லை என்று மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மெக்சிகோ அதிபர் ஆண்ட்ருஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “மெக்சிக்கோ அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஏற்படுத்தவிருக்கும் சுவர் பற்றி ட்ரம்ப்புடன் எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தவில்லை. தொலைபேசியில் இந்த எல்லைச் சுவர் குறித்து பேசவில்லை. அவருடனான உரையாடல் ஒரு மரியாதை நிமித்தமாகத்தான் இருந்தது. அந்த எல்லை சுவர் மக்கள் சட்டத்துக்கு முரணாக நாட்டைவிட்டு வெளியேற கூடாது என்பதற்காக உருவாக்கப்பட உள்ளது. இந்த எல்லைச் சுவருக்கு மெக்சிகோவால் முடிந்த நிதியை வழங்குவோம் என்று அமெரிக்காவிடம் கூறினேன்” என்றார்.

கடந்த ஜூலை மாதம் நடந்த தேர்தலில் ஆண்ட்ரஸ் மானுவேல் வெற்றி பெற்றார்.

மெக்சிகோவில் பல வருடங்களுக்குப் பின்னர், அதிபராக இடதுசாரி கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரஸ் மானுவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் மெக்சிகோவில் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற அதிபர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவுடன் எல்லைச் சுவர் பிரச்சினையில் எதிர்மறையாக அணுகுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஆண்ட்ரஸ் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும் விதத்தில் பேசி இருக்கிறார்.

Related posts