யாரும் சவாலிட முடியாது: ரஜினிக்கு அமிதாப் பதில்

உங்கள் உயரத்திற்கோ,உங்களது பணிவுக்கோ யாரும் சவாலிட முடியாது என்று ரஜினிக்கு அமிதாப் பச்சன் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக மேலாக உச்ச நடிகராக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வித்தனர். ரஜினியின் பிறந்த நாளைக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்த ரஜினி , “நீங்கள் என் உத்வேகம்… உங்கள் வாழ்த்துக்கு நன்றி” என தெரிவித்தார். இந்த நிலையில் ரஜினியின் நன்றிக்கு அமிதாப் பச்சன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அமிதாப் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நீங்கள் மிகவும் அன்பானவர்….. உங்கள் வார்தைகள் தாராளமானவை. ஆனால், உண்மை என்னவென்றால் உங்கள் உயரத்திற்கோ, உங்களது பணிவுக்கோ யாரும்…