சர்கார் முதல் நாள் ரூ. 66.6 கோடி வசூல்

உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் விஜய் சர்கார் முதல் நாள் ரூ. 66.6 கோடி வசூல் செய்துள்ளது. வசூலில் சர்கார் நான்காவது மிகப்பெரிய தென் இந்திய படமாக உள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது. சர்கார் படம் உலகம் முழுவதும் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. வெளியான அனைத்து தியேட்டர்களிலும் சிறப்பான வரவேற்பை பெற்று உள்ளது. பாகுபலி 2 (ரூ 214 கோடி), கபாலி (87.5 கோடி) மற்றும் பாகுபலி (73 கோடி) ஆகியவற்றை அடுத்து தென்னிந்திய திரைப்படங்களில் நான்காவது மிகப்பெரிய துவக்கத்தை இந்த படம் இப்போது பதிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 1 நாளில் சர்கார் 31.6 கோடி ரூபாயை வசூல் செய்து உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த படம் முழுவதும் 650…

தோழர் செல்வா பிறந்த நாள் தென்காசியில் கொண்டாடப்பட்டது!

தோழர் செல்வா என்றால் யார்..? இப்போது எல்லாருக்கும் தெரியும், ஆனால் தெரியாதது போல நடிப்பது ஒரு பாஷனாக இருக்கிறது.. சமூக நடிகர் திலகங்களின் நடிப்பு தொடர்கிறது. காலம் மாறும் நம் சமூக நடிகர்கள் செல்வாவை பேசுவார்கள், அப்போது இன்று பாடுபடும் தோழர்களை விலத்திவிட்டு தாமே ஆதியும் அந்தமும் என்றும் பேசலாம். ஈழத்தின் போராட்டத்தை ஏப்பம் விட்டு சொந்தம் கொண்டாடிய கூட்டம் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்ற குரல்களை இப்போது சமூக வலைத்தளங்களில் அவதானிக்க முடிகிறது.. தமிழர் தேசிய தந்தை என்று தமிழக இளைஞர்கள் அவருக்கு பெயர் சூட்டி மதிப்பளித்தபோது அவருக்கு இத்தனை பெறுமதி இருக்கிறதா என்று கேட்டவர் பலர். இன்று செல்வாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கும் பிரமாண்டத்தைப் பார்த்து பலர் மூக்கில் விரலை வைத்துப் பார்க்கிறார்கள். இதுவரை காலமும் ஆளவந்தாராக நாமே இருக்கிறோம் என்று எண்ணியவர்கள்…

யாழ்ப்பாணத்தில் செல்வா பாண்டியர் பிறந்த நாள் கொண்டாட்டம்

யாழ்ப்பாணத்தில் தமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியரின் பிறந்தநாள் நேற்று நவம்பர் 7ம் திகதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நேற்று தமிழகத்தில் பேரெழுச்சியுடன் தென்காசி நகரில் செல்வா பாண்டியர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. எப்படி முள்ளிவாய்க்காலில் தமிழர் அழிவை சந்தித்தார்களோ தமிழகத்தில் தமிழ் வளர்த்த பாண்டியர்களின் வீழ்ச்சி இடம் பெற்ற கடைசி நகரான தென்காசியில் இந்த விழா சிறப்போடு நடைபெற்றது. அத்தருணம் டென்மார்க் எழுத்தாளர் கி.செ.துரை எழுதிய உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது. இதே புத்தகம் இப்போது யாழ்ப்பாணத்தில் இரண்டாவது பதிப்பு அச்சாகிறது வரும் 12 திகதி வெளிவருகிறது. வேலைகள் வேகமாக நடைபெறுகின்றன. இது குறித்து தமிழர் நடுவம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : ஈழப்போருக்கு பின்பாக, போரின் பின்னணியில் செயல்பட்ட சர்வதேச அரசியலையும், ஏகாதிபத்திய நாடுகளின் காய்நகர்த்தல்களையும் கண்டுகொண்ட தமிழர்…

டென்மார்க்கில் செல்வா பாண்டியர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

தமிழர் தேசிய தந்தை என்று போற்றப்படும் தோழர் செல்வா பாண்டியரின் பிறந்த நாள் விழா நேற்று உலகின் பல பாகங்களிலும் பேரெழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் டென்மார்க்கிலும் கொண்டாடப்பட்டது. டென்மார்க்கில் உள்ள தமிழ் படைப்புக்களை உலக மன்றுக்கு கொண்டு சென்றவர் செல்வா பாண்டியர். ஓர் ஈழத் தமிழனால் முடியாத தொலைவுக்கு முள்ளிவாய்க்கால் சோகங்களை தமிழகத்தின் பட்டி தொட்டி என்று கொண்டு சென்றவர் செல்வா பாண்டியர். சென்னையில் ஒரு வாகனத்தை அமைத்து கன்னியாகுமரிவரை அறிஞர்களை சந்தித்து டென்மார்க் எழுத்தாளர் கி.செ.துரை எழுதிய புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து என்ற நூலை கொண்டு சென்று நம்பிக்கையை விதைத்தவர். அவருடைய பிறந்தநாள் டென்மார்க்கில் நேற்று கொண்டாடப்பட்டது. பெண் விமானி அர்ச்சனா தொடக்கி வைக்க, ரியூப்தமிழ் அதிபர் ரவிசங்கர் கேக் வெட்ட நிகழ்வு நடைபெற்றது. இது குறித்து தமிழர் நடுவம் வெளியிட்டுள்ள அறிக்கை :…

ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது எமக்கு பாதிப்பு ஹக்கீம்

புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை (07) இரவு கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் உம்ரா கடமையை நிறைவேற்ற, புனித மக்காவை நோக்கி புறப்பட்டுச் செல்ல முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது; தற்போது அரசியல் நெருக்கடி தோன்றியுள்ள நிலையில் இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதுமாத்திரமல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பவர்கள், இப்படியான கீழ்த்தரமான செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து…

சிவசேனா மறவன் புலவு சுமந்திரனை பதவி நீக்க கோரிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உப செயலாளருமான எம். ஏ. சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்குமாறு தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு , சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கடிதம் அனுப்பியுள்ளார். வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் உரையாற்றும் போது ஜனாதிபதியை "நீ: என விளித்து ஒருமையில் உரையாற்றி இருந்தார். அந்நிலையில் சுமந்திரன் அவ்வாறு ஒருமையில் ஜனாதிபதியை விளித்து உரையாற்றியதை ஏற்க முடியாது எனவும் அதனால் அவரை தமிழரசு கட்சியில் இருந்து நீக்குமாறும் நேற்றைய திகதியிடப்பட்ட (06ஆம் திகதி) கடிதம் ஒன்றினை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு மறவன் புலவு சச்சிதானந்தன் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , நீ என்ற உச்சரிப்பின்…

பிரிட்டனின் பிரபுக்கள் இருக்கும்வரை உனக்கென்ன குறை சக்கைபோடு

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை அரசியலமைப்புக்கு முரண்பட்டதாகக் காண முடியவில்லையென ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினரான நெஸ்பி பிரபு தெரிவித்தார். ‘ இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை அரசியலமைப்புக்கு முரணானதென அந்தப் பாராளுமன்றத்தின் உறுப்பினரொருவரான சேர். ஹீகோ ஸ்வெயாரினால் தெரிவிக்கப்பட்ட கருத்து குறித்து தம்மால் திருப்தியடைய முடியாதென நெஸ்பி பிரபு தெரிவித்திருக்கிறார். ஒருநாட்டின் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது அரசியலமைப்புக்கு முரணானதா, இல்லையா என்பதை அறிவிப்பதற்கு வெளிநாட்டில் எவருக்கும் உரிமை கிடையாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நெஸ்லி பிரபு கூறியிருப்பதாவது: “இலங்கையில் இடம்பெற்றுள்ள சம்பவம் எதுவுமே அரசியலமைப்புக்கு முரணானதாக என்னால் பார்க்க முடியாது. என்றாலும் அதனை புதுமையான செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நாம்…

அமெரிக்காவும் பிரித்தானியாவும் பாராளுமன்றத்தை கூட்ட கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய அமெரிக்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு மைத்திரி கூறிய திகதிகள் அவர் ஒரு பிரச்சனையை எப்படி தீர்ப்பார் என்பதற்கு அடையாளமாக உள்ளன. 5ம் திகதி 7ம் திகதி 14ம் திகதி கெகலிய கூற்றின்படி 16ம் திகதிதான் என்று இரண்டு வாரங்களில் 4 திகதிகள் மாறியுள்ளன. ஆகவே மைத்திரியால் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியதென வெளி நாடுகள் கவலைப்பட நியாயம் இருக்கிறது. இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் வெளி நாடுகளுக்கு கவலை ஏற்படுத்தியுள்ளன. அதில் பிரிட்டனும் ஒன்று. பல நூற்றாண்டுகள் அந்த நாட்டின் வாத்தியாராக இருந்த பிரித்தானிய பேரரசு பெற்ற குழந்தைதான் இலங்கை என்று என்றாவது வெட்கப்படாத பிரிட்டனை இலங்கையின் சிங்கள தலைவர்கள் மதிக்கமாட்டார்கள் என்பது கடந்த கால வரலாறு. அமெரிக்க வெளியுறவுத்துறை…

ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !

உலகின் முதல் மொழி தமிழ்!ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!! ஆதாரம் இதோ!!! W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி எடுத்துகாட்டுகள் : Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது. கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர். Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது. Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது. Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள்…