உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனி, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன. ஈராக் மற்றும் பாகிஸ்தான் 90-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 91-வது இடத்திலும் உள்ளன. சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் 165 நாடுகளுக்கு விசா இல்லாமல் போக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டிற்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டினுடைய விசா இன்றி பயணம் செய்ய அனுமதிப்பதற்காக மற்ற நாடுகள் பெற்றுள்ள சலுகைகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுவது வழக்கம். இந்தியா 75-வது இடத்திலிருந்து 66-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனையடுத்து இந்தியர்கள் இனி 66 நாடுகளுக்கு விசா இன்று பயணம் செய்யலாம்.

Related posts