மீண்டும் புதிய படத்தில் ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த் பேட்ட படத்தைத் தொடர்ந்து புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததும் உடனே கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதே எங்கள் இலக்கு என்று கூறி ரஜினி மக்கள் மன்றத்தை உருவாக்கி அதற்கு உறுப்பினர் சேர்ப்பதிலும் நிர்வாகிகளை நியமிப்பதிலும் தீவிரம் காட்டினார். கபாலியை முடித்து விட்டு தொடர்ந்து காலா படத்தில் நடிக்கவும் தொடங்கினார். காலா படம் வெளியானதும் கட்சியை அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் பேட்ட படத்தில் நடிக்க போய்விட்டார். இந்த படத்தை முடித்து விட்டு அடுத்த மாதம் டிசம்பர் 12–ந்தேதி தனது பிறந்த நாளில் கட்சி பெயரை அறிவித்து விடுவார் என்று பேசப்பட்ட நிலையில் அப்போது இல்லை என்று மறுத்து விட்டார். எனவே ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தள்ளிப்போகிறது. அதற்கு முன்பாக…

நடிகர் அர்ஜூன் வழக்கை சந்திப்பேன் –சுருதி ஹரிகரன்

என் மீது அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திப்பேன் என்று நடிகை சுருதி ஹரிகரன் கூறினார். நடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை சுருதி ஹரிகரன் ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். படப்பிடிப்பு ஒத்திகையில் அர்ஜூன் தன்னை இறுக்கி அணைத்து கைவிரல்களை உடலில் படர விட்டதாக குற்றம் சாட்டினார். அர்ஜூன் இதனை மறுத்தார். சுருதி ஹரிகரன் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று கூறினார். அர்ஜூன் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவும் பணம் பறிக்கும் முயற்சியில் சுருதி ஹரிகரன் பாலியல் புகார் சொல்கிறார் என்று கண்டித்தார். கன்னட திரைப்பட வர்த்தக சபை அர்ஜூனையும், சுருதி ஹரிகரனையும் சந்திக்க வைத்து சமரச முயற்சியில் ஈடுபடப்போவதாக அறிவித்தது. இந்த நிலையில் சுருதி ஹரிகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:– ‘‘சமரச முயற்சி சம்பந்தமாக கர்நாடக வர்த்தக சபையில்…

4 வருடம் பாலியல் தொல்லையில் தவித்த சுனைனா

தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சுனைனா, மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, தெறி, சமர், கவலை வேண்டாம், காளி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது தனுசுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிக்கிறார். நடிகைகள் மீ டூ வில் பாலியல் தொல்லைகளை பகிர்ந்து வரும் நிலையில் சுனைனாவும் தனக்கு ஏற்பட்ட தொந்தரவுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:– ‘‘எனக்கு அப்போது 12 வயது இருக்கும். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வேன். ஆட்டோ ஓட்டுநர் அருகில் அமர்ந்து செல்ல மாணவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் அந்த டிரைவர் என்னை மட்டும் அருகில் உட்கார வைத்துக்கொள்வார். அதை பெருமையாக நினைப்பேன். அவர் அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி செல்வேன். அப்போது அந்த டிரைவர் வெளியே சொல்ல முடியாத…

ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் வழக்கு

தனக்கு எதிராக பாலியல் புகார் கூறிய சுருதி ஹரிகரனுக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் மானநஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார். அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த சுருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்தார். இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறினார். சுருதி ஹரிகரன் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்தார். “நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. சுருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள்” என்று அவர் விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் நடிகர் அர்ஜூன் தமது திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், குற்றம்சாட்டிய நடிகை சுருதி ஹரிகரனுக்கு எதிராக பெங்களூர்…

“ரோ”வுக்கு தகவல் வழங்கிய அமைச்சர்கள்

அமைச்சரவையில் இடம் பெற்ற விவகாரங்களை இந்தியாவின் “ரோ” அமைப்பிற்கு தகவல் வழங்கிய நான்கு அமைச்சர்கள் தொடர்ந்தும் சுதந்திரமாக செயற்படுகின்றமை ஆபத்தானதென விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாயத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் ,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் குறிப்பிடாத ஒரு விடயத்தை குறிப்பிட்டதாக இந்திய ஊடகவியலாளருக்கு பொய்யான தகவல்களை வழங்கிய நான்கு அமைச்சர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பிற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தும் விதமாகவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த நால்வரும் செயற்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." என தெரிவித்தார்

சம்பந்தன் மட்டும் போதும் மஹிந்த சமரசிங்க

வடக்கு தொடர்பான விடயங்களில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடனே அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் எனத் தெரிவித்த மஹிந்த சமரசிங்க, இதற்காக விக்னேஸ்வரனை அழைக்க வேண்டிய தேவை கிடையாது எனவும் குறிப்பிட்டார். மேலும் வடக்கில் மாத்திரமல்ல தெற்கு மற்றும் கிழக்கிலும் அடிப்படைவாதிகள் உள்ளனர். இவர்கள் குறுகிய நோக்கத்திற்காகவே செயற்படுகின்றனர். நாட்டில் அநாவசியமான குழப்பங்களை தோற்றுவித்து அரசியல் செய்வதே இவர்களின் நோக்கமாக உள்ளது. சுதந்திர கட்சி இவ்வகையான அரசியல் செயற்பாடுகளுக்கு இடமளிக்காது என்றும் தெரிவித்தார். கொழும்பு - 10 டாலி வீதியில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்ற தயார் இல்லை

கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒற்றுமை என்பதற்காக சீ.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பித்திருக்கின்றார். இந்த கட்சி அறிவிப்பு கூட்டம் நேற்று (24) நல்லூர் ஆலய சுற்றாடலில் உள்ள நடராசா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை. இது குறித்து கருத்துக் கேட்டபோதே செ.கஜேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுவதுடன், அவருடைய புதிய கட்சி தமிழ்தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் தீர்வினை தமிழ்…