மீடூ வாய்ப்பை தவறாக பயன்படுத்தாதீர்கள்

பெண்கள் தங்கள் மீது நடந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி மீடூ இயக்கம் மூலமாக இணைய தளத்தில் வெளிப்படையாக பேசி வருகின்றனர். நடிகைகள் பலர் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப் பட்டதுபற்றி கூறிவருவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூறியதாவது: பெண்கள் பாலியல் பலாத்காரம் அல்லது அவர்களை பாலியலுக்கு வற்புறுத்துதல் வேறு, பெண்களிடம் தவறாக நடப்பது வேறு, இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்கிறார்கள். இந்த பிரச்னையில் எது நடந்தது, எது நடக்கவில்லை என்பதை எப்படி பிரித்துப்பார்க்க முடியும். இதை கூர்ந்து கவனிக்க வேண்டும். பல ஆண்டுகளாக பெண்கள் இதுபோன்ற கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். அது நடக்க கூடாது. நிறைய சயம்பவங்கள் இதுபோல் நடப்பதால் அச்சம்பவங்கள் நீர்த்துபோகச் செய்யப்படுகின்றன. பெண்கள் தங்கள் குரலை வெளிப்படுத்த உதவியிருக்கும் சமூக வலைதளங்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். இம்முறை இதுபோன்ற…

‘மீ டூ’வால் முடங்கிய இந்தி படங்கள்

திரையுலகை ‘மீ டூ’ இயக்கம் உலுக்கி வருகிறது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கதிகலங்கி உள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான டைரக்டர்கள் படங்களில் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் இந்தியில் சில பெரிய பட்ஜெட் படங்கள் முடங்கி உள்ளன. முகல் படத்தின் இயக்குனர் சுபாஷ் கபூர் மீது நடிகை கீதிகா பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ளார். அவர் மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் முகல் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த அமீர்கான் அந்த படத்தில் நடிக்க மறுத்து விலகி விட்டார். அதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டது. இயக்குனர் சஜித்கான் இயக்கும் ஹவுஸ்புல்–4 படத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பதாக இருந்தது. நானா படேகரும் இதில் நடிக்கிறார். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளும் தொடங்கின. இந்த நிலையில் சஜித்கான் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரிடம்…

ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த லாரன்சுக்கு பெரிய மனது

மீ டூ’ பரபரப்புக்கு முன்பே பாலியல் புகார்களால் திரையுலகை அதிர வைத்தவர் ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு தருவதாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்து தன்னை ஏமாற்றி விட்டதாக அவர் கூறினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டினார். ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர் லாரன்ஸ் மறுத்தார். நடிப்பு திறமையை வெளிப்படுத்தினால் அடுத்த படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு அளிப்பதாகவும் கூறினார். இந்த நிலையில் லாரன்சின் அடுத்த படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை ஸ்ரீரெட்டியே தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘லாரன்சை அவரது இல்லத்தில் சந்தித்தேன். இனிமையாக என்னை வரவேற்றார் நிறைய குழந்தைகள் அங்கு மகிழ்ச்சியோடு இருந்ததை பார்த்தேன். எனக்காக அவர்கள் பிரார்த்தனை செய்தனர். அங்கு நடித்து காண்பித்தேன். அதை பார்த்த லாரன்ஸ் அவரது அடுத்த படத்தில்…

ராதாரவி சர்ச்சை பேச்சுக்கு நடிகர் சித்தார்த் எதிர்ப்பு?

இந்தியாவில் ‘மீ டூ’ இயக்கம் பரபரப்பாகி வருகிறது. இந்தி நடிகைகள் பலர் பாலியல் துன்புறுத்தல்களை இதில் பகிர்ந்து வருகிறார்கள். தமிழ் திரையுலகில் பாடகி சின்மயி, பெண் இயக்குனர் லீனா மணிமேகலை ஆகியோர் பாலியல் புகார் கூறியுள்ளனர். நடிகர் சித்தார்த் ‘மீ டூ’ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் ‘மீ டூ’ வில் பாலியல் புகார் கூறிய சின்மயிக்கு பதில் அளித்து படவிழாவில் பேசிய நடிகர் ராதாரவி, ‘மீ டூ’ வில் சின்மயி போன்றவர்கள் பாலியல் குற்றங்களை பதிவிடுவது சினிமாவுக்கு அசிங்கம் என்றும், நமது கலாசாரத்துக்கு ‘மீ டூ’ இயக்கம் தேவையற்றது என்றும் கூறினார். ராதாரவி பேச்சை நடிகர் சித்தார்த் டுவிட்டரில் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:– ‘‘மீ டூ இயக்கம் படித்த மற்றும் பணவசதி கொண்ட பெண்களால் தொடங்கப்பட்டது என்று வில்லன் நடிகர்கள் கூறலாம்.…

தேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் எஸ் -400 ரக ஏவுகணை

தேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் எஸ் -400 ரக ஏவுகணை வாங்கப்படுகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரான்சிடம் இந்தியா வலுவான உறவை கொண்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடுகளில் பிரான்சும் ஒன்று. இந்தியா- பிரான்சு இடையேயான உறவில் எந்த தொய்வும் இல்லை. தேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் எஸ் 400 ரக ஏவுகணை வாங்கப்படுகிறது. நமது கொள்கைகள் மற்றும் எண்ணத்தை அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டோம். இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். நமது எதிர்பார்ப்புகளையும் அந்நாட்டிடம் தெரிவித்து விட்டோம். ஈரான் மீதான தடை இந்தியாவை பாதிக்காது என்று அமெரிக்க மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை, பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும்…

பிரதமர் மோடியிடம் சிறிசேனா விளக்கம்

இலங்கை அதிபர் சிறிசேனாவைக் கொலை செய்ய இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' (RAW) திட்டமிட்டது என்று வெளியான செய்தி தொடர்பாகப் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா நேற்று விளக்கம் அளித்தார். அப்போது, தன்னைக் கொல்வதற்கு இந்தியாவின் உளவு அமைப்பு 'ரா' சதித்திட்டம் தீட்டியிருந்தது என்ற செய்தி தவறானது, அடிப்படை ஆதாரமற்றது என்று பிரதமர் மோடியிடம் அதிபர் சிறிசேனா தெரிவித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் பங்கேற்ற அதிபர் சிறிசேனா பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளார். அப்போது, தன்னைக் கொல்வதற்கு இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' திட்டமிட்டிருந்தது. ஆனால், இது பிரதமர் மோடிக்குத் தெரியாது என்று பகீர் குற்றச்சாட்டு வைத்தார் என்று தனியார் ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டது. இது தொடர்பாக அந்த…

அமெரிக்காவுக்கு ரூ. 700 கோடி பணம் அனுப்பிய சவுதி

பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு, சவுதி அரேபியா 700 கோடி ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் ஜமால். இந்த நிலையில் துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன்னர் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார். இந்த சூழலில் இவ்வழக்கு தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டு ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறி வந்த நிலையில் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, ஜமால் கொலை செய்யப்பட்டது உறுதியானால்…

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (18) பிற்பகல் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா நோக்கிப் புறப்பட்டார். இவ்விஜயத்தின் போது நாளை மறுதினம் (20) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இவ்வுத்தியோகபூர்வ விஜயத்தின்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அந்நாட்டின் சிரேஷ்ட தலைவர்கள் சிலரையும் அவர் சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சாகித்திய சுருதிலயா வழங்கும் இசை அரங்கம்

டென்மார்க்கின் புகழ் பெற்ற சங்கீத ஆசிரியை திருமதி குமுதினி பிறித்திவிராஜ் அவர்களுடைய சாகித்திய சுருதிலயா இசைக்கல்லூரி இவ்வாரம் விழா கோலம் பூணுகிறது. இக்கல்லூரி மாணவர்கள் வழங்கும் கர்நாடக இசைக்கச்சேரி நிகழ்வு எதிர்வரும் சனி 20.10.2017 மாலை 4.00 மணியளவில் கேர்னிங் கலாச்சார இல்லம் 7 நோரகேத - 7ல் இருக்கும் விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இசையரங்கம் 2018 என்ற மகுடமிட்டு நடைபெறும் இந்த நிகழ்வு பார்த்து மகிழவும் ஆதரித்து ஆனந்தமடையவும் உரியதோர் நிகழ்வாகும். கிடைத்தற்கரியது அத்தி பூத்தால் போல அரிதாக வருவது.. வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள் தமது சங்கீத திறமையை காண்பிக்க இருக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் ஆறு இசை மாணவிகள் பாடுகிறார்கள் என்றால் பாருங்களேன். இது சாதாரண நிகழ்வல்ல சிறந்த சங்கீத ரசிகர்கள், இசையின் கலாபிமானிகள் கலந்து சிறப்பிக்க வேண்டிய நிகழ்வாகும்.…

அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவின் அஞ்சலிக்கூட்டம்

டென்மார்க்கின் புகழ் பெற்ற கவிஞரும் சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் தாபகருமான அமரர். வேலணையூர் பொன்னண்ணாவின் நினைவாஞ்சலி கேர்னிங் நகரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப. 14.00 மணியளவில் நோரகேதவில் உள்ள கலாச்சார இல்லத்தில் நடைபெற இருக்கிறது. டென்மார்க் தமிழ் கலைஞர்கள் சங்கம், சைவத்தமிழ் பண்பாட்டு பேரவை என்பன இணைந்து முன்னெடுக்கும் நிகழ்வு இதுவாகும். டென்மார்க்கின் பல பாகங்களில் இருந்தும் பேச்சாளர் பங்கேற்று அஞ்சலி நிகழ்வில் உரையாற்றுகிறார்கள். காலம் சென்ற ஒருவரை நினைவுகூர்ந்து டென்மார்க்கில் நிகழ்வுகள் நடப்பது மிகவும் குறைவு. அந்த வகையில் இது முக்கியமான நிகழ்வாகும். இனி ஆளாளுக்கு அறுபது காரணங்களை சொல்லி நடத்துவோரை துவள வைக்காமல் துள்ளி வரும் அருவியாக அனைவரும் அருகில் இருப்போரையும் அள்ளி வரவேண்டுமன்றோ..? ஆர்வமுள்ள அனைவரும் கலந்து இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்காக பாடுபட்ட அந்த பெருமகனாரை அஞ்சலிக்க வேண்டியது கடமை.…