உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 18. 35

சிறையிருப்பை மாற்றும் கிருபையுள்ள தேவன்.
சகோதரன் பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன்இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார். யோபு 42:10.

சிறையிருப்பு எல்லாவற்றிலும் மிகவேதனையானது. அது இரண்டு வகைப்படும். முதலாவது சரீரபிரகாரமான சிறையிருப்பு. இரண்டாவது ஆத்துமாவின் சிறையிருப்பு. இன்றும் அநேக பக்தர்கள்கூட சிறையிருப்பின் பாதையில் கடந்து சென்றிரு க்கிறார்கள். சென்று கொண்டும் இருக்கிறார்கள்.

சரீரப்பிரகாரமான (உலகப்பிரகாரமான) சிறையிருப்பை அரசாங்கங்கள் சட்ட திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கிறது. நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கின்றன. தவறு செய்தவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் அதைவிடக் கொடுரமானது பிசாசு (சாத்தான்) கொண்டுவரும் சிறையிருப்பு. அது ஆத்துமாவில் வரும் சிறையிருப்பு. நோய் என்கிற சிறையிருப்பு. கடன் என்கிற சிறையிருப்பு. சூனியங்கள், செய்வினைகள், ஏவல்களால் வரும் சிறையிருப்பு. குடும்ப உறவின்மையால் – குடும்பங்களினால் வரும் சிறையிருப்பு. இப்படிப்பல.

இந்த மாபெரும் உண்மையை விளங்கிக்கொள்ள வேதப்புத்தம் உள்ளவர்கள் யோபுவின் புத்தகம் முழுவதையும் வாசித்தால் முழுமையாக அறிந்து கொள்ளலாம். யோபு ஒருஜெபவீரன். கர்த்தர்மேல் அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தவர். அவர் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனு மாயிருந்தார். யோபு 1:8. ஆனாலும் அவருடைய வாழ்க்கையில் ஓர் சிறையிருப்பு வந்தது. அது உலகப்பிகாரமான சிறையிருப்பல்ல. அது பிசாசு கொண்டுவந்த சிறையிருப்பு. (தேவமகிமைக்கானது. முழுவதும் வாசித்தால் அறியமுடியும்)

அவருக்கு அதனிமித்தம் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பாடுகள் வந்தது. ஒரே நாளில் அவரின் பத்துப்பிள்ளைகளும், ஆடு மாடுகள், ஒட்டகங்கள், குதிரைகள், சொத்துக்கள் எல்லாம் அழிந்தன. அவரின் சரீரத்திலும் பாடுகள். அவருக்கு ஆறுதல் சொல்ல வந்தவர்கள், அவரை குறைகூறினார்கள். அப்பொழுது அவர், பார்க்கவந்த நண்பர்களுக்காக தேவனிடம் வேண்டினார். தேவன் அவர் சிறையிருப்பை மாற்றினார்.

அலைகள் வாசகநேயர்களே, உங்களுடைய சிறையிருப்பு எதுவாயிருந்தாலும் நம் தேவனாகிய கர்த்தர் அதை மாற்ற வல்லமையுள்ளவர். நாம் செய்ய வேண்டியது அவரின் வாக்குறுதிகளை, வாக்குத்தத்தத்தை அறிக்கைபண்ணி தேவனிடம் வேண்டுதல் செய்யதுதான். அவ்வாறு நாம் வேண்டுதல் செய்யும்போது தேவன் எமது வேண்டுதல்களைக்கேட்டு எம்மை சகலசிறையிருப்பிலும் இருந்து விடுவிப்பார். காரணம் அவர் தமது வாக்குறுதிகளை மறக்காதவர். அவரின் வாக்குறுதிகள் பின்வருமாறு கூறுகிறது.

உன்தேவனாகிய கர்த்தர் உன்சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதறடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார். உபாகமம் 30:3. கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர். சங் 85:1. தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். சங்.53:6.

அநேகர் சிறையிருப்புக்கு தங்களைத் தாங்களே ஒப்புக்கொடுத்து விடுகிறார்கள். தமிழில் கூறுவார்கள், மாடு தன்தலையை நுகத்தடிக்கு ஒப்புக்கொடுப்பதுபோல, ஏதோ ஒன்று அவர்கள் சிறையிருப்புக்கு போவதற்கு காரணமாக அமைகிறது. உதாரணமாக புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்களில் பெரும்hமண்மையான மக்கள் பெருமளவு கடனில் வாழ்கிறார்கள். அதற்கான காரணங்களை நாம் நன்குணர்வோம். ஆதையிட்டு அநேகர் உணர்வடைவதில்லை. உணரவைக்கும்போது ஏற்றுக்கொள் வதும் இல்லை. அதனால் சிறையிருப்பில் சிக்கிக்கொள்கிறார்கள். சிறையிருப்பு ஒருவருக்கும் திடீரென வருவதில்லை. ஆனால் தேவனில் அன்புகூர்ந்து, அவருக்கு கீழ்படிந்து நடக்கும் பிள்ளைகளுக்கு சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக மாற்றுகிறவர் நம் தேவன்.

சிறையிருப்புக்கான காரணத்தையும், அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் நாம் அறிந்து, விடுதலையை அடைய முன்வருவோம்.

பயத்தால் சிறையிருப்பு.

இன்று பலருக்கு ஏதோவொருவகைப்பயம் பிடித்துள்ளதை நாம் காணக்கூடியதாக உள்ளது. சுகவீனத்தைக் குறித்து, மரணத்தைக் குறித்து, கணவன் – மனைவி – பிள்ளைகளை; குறித்து, கடன் – வேலைவாய்பைக் குறித்து இப்படியாக பல வகையான பயங்கள் மனிதரைப்பிடித்து, இன்று அவர்களின் மனதை அலைக் களிக்கின்றது. இன்று நாம் காட்டு விலங்குகளைப்பற்றிய படங்களில் அல்லது, சிறுவர்களின் காட்டுன் படங்களில் இவற்றை தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். மிருகங்களைப் பிடிக்கநினைக்கும் சிங்கம் முதலில் பயங்கரமாக கர்ச்சித்து அவைகளின் உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்தும். அவைகள் பயத்தால் அங்கு மிங்குமாக ஓடி இறுதியில் சிங்கத்தின் குகையடியினில் வரும்போது சிங்கம் அவற்றைப்பிடித்துக் கொள்ளும்.

பயம்வரும்போது நாம் செய்யவேண்டியது, இயேசுவே என்னைக் காப்பாற்றும், என்னைக் காத்தக்கொள்ளும் என்று வேண்டிக்கொள்வதுதான். அத்துடன் தேவனை அறிந்த மக்களுடன் தொடர்பு கொண்டு ஜெபத்தின்மூலம் பாதுகாப்பை தேடிக்கொள்ள வேண்டும்.

தேவையற்ற வார்த்தைகளைத் தவிர்த்தல்.

சிலருடைய சிறையிருப்புக்கு அவர்களுடைய வார்த்தைகள்தான் காரணம். எப்போதும் தோல்விகளையும், பிரட்சனைகளையும், தாம் மரித்தால் குடும்பம் நன்றாக இருக்குமா என்று மரணத்தையும், குரேததத்தையும் பேசிக்கொள்வார்கள். இதன் விளைவு சிந்தனையால் சிறைபிடிக்கப்படுகிறார்கள். வேதம் இதனை மிகவும் கடுமையாக எச்சரிக்கிறது. மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்@ அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதி.18:21.

இயேசுவும் இவ்வாறு இதனைக் கண்டிக்கிறார். மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்@ அல்லது உன்வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார். மத்.12:36-37.

வேண்டுதலால் விடுதலை.

தேவனிடத்தில் மட்டுந்தான் மனிதர்கள் தங்கள் குறைகளை மனந்திறந்து பேசமுடியும். மனிதர்களிடம் அவற்றைக் கூறும்போது எவ்வளவு விபரீதம் ஏற்ப்படுகிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் தேவனிடம் அவற்றைக்கூறும்போது, நமது தவறை நாம் உணரக்கூடியதாக மட்டுமல்ல, தீமையான வழிகளை விட்டுவிலகி தேவன் விரும்பும் வழியில் நடக்கக்கூடியதாகவும் உள்ளது. இதனை வேதம் சங்கீதம் 124.7 எடுத்துக்காட்டுகிறது. – வேடருடைய கண்ணிக்குத் – தப்பின குருவியைப்போல தம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி விடுபட்டது. நாம் தப்பினோம்.

இதன் பொருள், சிலபிரட்சனைகள் திடீரென்று வந்து வேகமாகப் போய்விடும். சுpலபிரட்சனைகளில் இருந்து நீங்கள் விடுபட முயற்சி செய்தாலும் இன்னும் அதிகமாக ஆழ்ந்துவிடுகிறீர்கள். உதாரணமாக புரளியைப் பரப்பும்போது அவை பரவப்பரவ நீங்கள் சற்றும் எதிர்பாராத பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இதன் பாதிப்பைச் சரிசெய்ய நீங்கள் முயன்றால் நிலைமை இன்னும் மோசமாகி விடுகிறது. இதுவே – வேடருடைய கண்ணிக்குச் – சரியான எடுத்துக்காட்டு. கண்ணியில் மாட்டிக் கொண்ட பறவை விடுபட முயலும்போது இன்னும் அதிகமாக சிக்கிக்கொள்கிறது. தன் சொந்த முயற்சியால் அந்தப் பறவை வெளிவரமுடியாது. ஆனால் இப்பொழுது அந்த கண்ணி அற்புதவிதமாக விடுபட்டது. பறவை பாதுகாப்பான இடத்திற்கு பறந்து போய்விட்டது மேலே நாம் வாசித்த பகுதியை எழுதிய தாவீது என்ற பரிசுத்தவான் கூறுகிறான். இப்படி நீங்கள் விடுபடக்;கூடுமானால் ஒரே ஒரு நபருக்கே – தேவனுக்கே – நீங்கள் நன்றி கூறவேண்டும்.

ஆகவே தாவீது தேவனிடம் ஜெபித்ததுபோல நாமும் தேவனிடம், கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும் என்று வேண்டுதல் செய்து எமது சிறையிரப்பில் இருந்து விடுதலையைப் பெறுவோம்.

அன்பின் பரலேபக பிதாவே, இன்று நீர் சிறையிருப்பில் இருந்து விடுதiயை பெறும் வழியை எனக்கு தெரியப்படுத்தியதற்காக உமக்கு நன்றி அப்பா. அந்த வழியை நான் கடைப்பிடித்து நடந்து, உம்முடைய வழியில் வாழ உதவி செய்து காத்து வழிநடத்தும் படியாக இயேசுவின் நாமத்தால் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்.

உங்களின் ஜெபத்தேவைகளுக்கு:- தொலைபேசி இல. 0045 – 60657150

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.

Related posts

Leave a Comment