அலைகள் வாராந்தப் பழமொழிகள் 28.08.2018 செவ்வாய்க்கிழமை

வாழ்க்கையை இளமையாக்கி புது நீர் பாய்ச்ச வரும் தகவல்கள்.. 01. வாங்கும் ஊதியத்திற்கும் அதிகமாக உழைப்பேன் என்று உறுதிமொழி எடுக்காமலிருப்பது தோல்விக்கான 12 காரணங்களில் முக்கியமானது. 02. ஒரு மனிதன் உற்சாகம் இல்லாமல் வாழ்கிறானா அவன் துரதிர்ஷ்டசாலியாக இருக்கிறான் என்று அர்த்தம். அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு உற்சாகம் ஏற்படாது என்கிறார் எட்வேட் பாக். 03. ஒரு மனிதனுக்கு எளிமையான வாழ்வின் தொடக்கம் என்பது மிகவும் முக்கியமானது. அதுதான் நம்மால் முடியாது என்று சொல்லப்படும் இலக்குகளை எட்டித் தொட வேண்டும் என்ற தூண்டுதலையே ஏற்படுத்துகிறது. 04. வாழ்க்கை அனுபவங்கள் தரும் பாடம் மூலம் மனிதன் அறிவு வளர்ச்சி பெறுகிறான். ஒவ்வொருவரும் தத்தமது கடந்த கால அனுபவங்களை எப்படியாக எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களுடைய வெற்றி தோல்விகளின் விகிதாசாரம் அமைகிறது. 05. செல்வச் செழுமை என்பது மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய…

சிந்தனைச் சிகரம் செல்வா பாண்டியர் புதிய தொடர் அத்தியாயம் 09

கதையை தொடங்க முன்னர் ஒரு சிறிய முன்னோட்ட காட்சி.. வெள்ளித்திரையில் " பட்பட் படீ " ரென சில பிரளயகால வெடிகள்.. அவை என்ன இடி முழக்கத்தின் எச்சங்களா..? காலத்தின் கடிகாரம் வெடிபட இடித்து வெகு பின்னோக்கி அறுந்த துண்டுகளாக ஓடுகிறது.. நாள், மணி, நிமிடம், விநாடி எல்லாம் "சரக் சரக் " கென சுழன்று நிற்கின்றன. வேறென்ன பார்க்கத்தானே வேண்டும்... இமைகளை வெட்டத்தான் முடியுமா..? 1989 மாசி 24ம் திகதி அதிகாலை..! ம்... காலம் ஏன் இந்த இடத்தில் நிற்க வேண்டும்..? செல்வாவும், சுரேசும் கூர்ந்து பார்க்கிறார்கள். காலைப்பனி நுளம்பு வலைபோல மூடிக்கிடக்கிறது. ஆட்காட்டி குருவிக்கும் அங்கு ஏதோ வேலை. குணுக்குகளாக பனி தொங்கிய இரண்டு ரோஜாக்களின் இதழ்கள் குருவியின் சத்தத்தில் ஒடிந்து பொல பொலவென கொட்டுண்டு சிலோமேஷனில் வெள்ளிக் காசுகளாக பொழிகின்றன.. சுண்டிய நாணயங்களாக…

ஒரே வாரத்தில் இந்தி கற்ற யானைகள்

கர்நாடக காடுகளில் சுற்றித் திரிந்த 11 யானைகள் உத்தர பிரதேசத்திசல் உள்ள துத்வா தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன. அதற்காக ஒரே வாரத்தில் அந்த யானைகள் இந்தி மொழி கற்று கொண்டதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இளம் யானைகள் சற்று எளிதாக புதிய மொழியை கற்றுக் கொண்டதாகவும், மற்ற யானைகளுக்கு அது சற்று கடினமாகவும் இருந்தது. இதற்காக கர்நாடகாவில் இருந்து வந்த பாகன்கள் அந்தா யானைகளுடன் தங்கி கனடா மொழியில் இருந்து வார்த்தைகளை இந்திக்கு மொழி பெயர்த்து உதவியதாக மேலும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது

நடிகர் சிலம்பரசனை எச்சரித்த நீதிமன்றம்

'அரசன்' என்ற திரைப்படத்தில் நடிக்க முன்பணமாகப் பெற்ற 50 லட்ச ரூபாய்க்கு உத்தரவாதம் அளிக்காவிட்டால், வீட்டில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய நேரிடும் என நடிகர் சிலம்பரசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி. கடந்த 2013-ஆம் ஆண்டு பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் நடிகர் சிலம்பரசனை வைத்து 'அரசன்' என்ற தலைப்பில் படத்தை தயாரிக்க திட்டமிட்டது. இந்தப் படத்துக்காக சிலம்பரசனுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, முன் பணமாக 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்தப் படத்தில் சிலம்பரசன் நடிக்காத காரணத்தால் முன் பணமாக கொடுத்த தொகையைத் திரும்ப தரக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

கணக்கில் வராத பெண்களின் மரணங்கள்

இந்தியாவில் பெரும்பாலான பெண் விவசாயிகளின் தற்கொலைகள் விவசாயத் தற்கொலையாக பதிவு செய்யப்படுவதில்லை, விவசாயத் தொழிலில் முழுமையாக பெண்கள் ஈடுபட்டாலும், அரசு ஆவணங்களில் விவசாயிகளாக அவர்கள் முன்னிறுத்தப்படுவதில்லை என பத்திரிக்கையாளர் சாய்நாத் தெரிவித்துள்ளார். சென்னையில் யுனைட் (தகவல் தொழில்நுட்ப பொறியலாளர்களின் சங்கம்) நடத்திய நிகழ்ச்சியில் பேசிய சாய்நாத், விவசாயத் தொழிலில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு இருந்தாலும், விவாசயத்தில் ஏற்படும் நஷ்டம், கடன் காரணமாக அவர்கள் இறந்தால், அவர்களின் இறப்பு பெண்களின் தற்கொலை என்ற தலைப்பில் பதிவாகின்றன என்றும் பல நேரங்களில் பெண்களின் பெயரில் நிலம் இல்லாததால், அவர்கள் விவசாயிகள் என்றே பதிவு செய்யப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். 80 சதவீதம் அவர்களே "விவாசய வேலைகளில் சுமார் எண்பது சதவீத பணிகளைப் பெண்கள் மேற்கொள்கிறார்கள். நாற்று நடப்படுவதில் இருந்து பயிர்கள் விளைந்து, அறுவடை செய்வது வரை பெண்களின் உழைப்பு கணிசமானது.…

அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள்

அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் - துரை தயாநிதி அழகிரி "தி.மு.க.வின் உண்மையான அடித்தட்டு தொண்டர்கள் கோரிக்கை விடுத்த காரணத்தினால்தான் இந்த பேரணியை நடத்துவதாகவும், இதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். 5-ந்தேதி நடக்கும் அமைதி பேரணி தங்கள் பலத்தை காட்டும் பேரணி அல்ல. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியாகவே அது இருக்கும்" என்று ஹலோ எப்.எம். பேட்டி ஒன்றில் துரை தயாநிதி அழகிரி கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ். "தி.மு.க.வில் தன்னை சேர்த்துக்கொள்ளும்படி அழகிரி தனது குடும்பத்தினரிடம் பேச்சு நடத்தவில்லையா? என கேட்டபோது, கருணாநிதி இருந்தபோது அவரிடம் மட்டும் பேசியதாகவும், மற்ற யாரிடமும் தனது தந்தை தொடர்பு கொண்டதில்லை எனவும் துரை தயாநிதி கூறினார். தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக சேர்ந்து அதனை ஆட்சிக்கட்டிலில் அமர வைப்பதே தங்களது ஆசை என…

விஜயகாந்த் பணிகளை தொடர வேண்டும்

விஜயகாந்த் பொதுவாழ்வுப் பணிகளை முன்னெப்போதும் போல் தொடர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்துவந்த அவர், 31-ம் தேதி இரவு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. விரைவில் வீடு திரும்புவார். எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கட்சி அலுவலகம் தெரிவித்தது. விஜயகாந்த் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்ட போது, ''அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை உள்ளது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக் கப்பட்டுள்ளார். தேவையான சிகிச்சைகளை அளித்து வருகிறோம்'' என்றனர். விஜயகாந்த் உடல்நிலையில் தொடர் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை முடிந்த நிலையில் அவர் இன்று காலை வீடு திரும்பினார். இந்நிலையில் இது தொடர்பாக ஸ்டாலின் தன்…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 18. 35

சிறையிருப்பை மாற்றும் கிருபையுள்ள தேவன். சகோதரன் பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன்இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார். யோபு 42:10. சிறையிருப்பு எல்லாவற்றிலும் மிகவேதனையானது. அது இரண்டு வகைப்படும். முதலாவது சரீரபிரகாரமான சிறையிருப்பு. இரண்டாவது ஆத்துமாவின் சிறையிருப்பு. இன்றும் அநேக பக்தர்கள்கூட சிறையிருப்பின் பாதையில் கடந்து சென்றிரு க்கிறார்கள். சென்று கொண்டும் இருக்கிறார்கள். சரீரப்பிரகாரமான (உலகப்பிரகாரமான) சிறையிருப்பை அரசாங்கங்கள் சட்ட திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கிறது. நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கின்றன. தவறு செய்தவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் அதைவிடக் கொடுரமானது பிசாசு (சாத்தான்) கொண்டுவரும் சிறையிருப்பு. அது ஆத்துமாவில் வரும் சிறையிருப்பு. நோய் என்கிற சிறையிருப்பு. கடன் என்கிற சிறையிருப்பு. சூனியங்கள், செய்வினைகள், ஏவல்களால் வரும் சிறையிருப்பு.…

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த சருகுபுலி

அம்பாறை திருக்கோவில் வனஜீவராசிகள் அலுவலகத்திற்குட்பட்ட தம்பிலுவில்-02 சங்கன் விதானை வீதியில் அமைந்துள்ள வீடொன்றிற்க்குள் நேற்று நள்ளிரவு புலி இனத்தைச் சேர்ந்த விலங்கொன்று (சருகுபுலி) புகுந்ததில் வீட்டில் உள்ளவர்கள் பீதியடைந்துள்ளனர். இவ் சம்பவம் தொடர்பில் தெரிவித்த வீடடில் உள்ளவரகள், தாம் உறங்கிக் கொண்டு இருந்த வேளை எமது சுவாமி அறைக்குள் பொலித்தினால் மூடப்பட்டிருந்த ஜன்னல் வழியாக யாரோ விழுந்தது போல் சந்தம் கேட்டதையடுத்து. திருடன் என்ற சந்தேகத்துடன் அயலவர்களின் உதவியுடன் அறையை சோதனையிட்ட போது இந்த புலி சீரிக் கொண்டு எம் மீது பாய்ந்ததாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து சுமார் இரண்டு மணிநேர போராட்டத்துக்குப் பின் இந்த சருகு புலியை மடிக்கப் பிடித்ததாகவும் தெரிவித்தனர். அதன் பின்னர் திருக்கோவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் இந்த புலி திருக்கோவில் வட்டமடு காட்டில் கொண்டு சென்று விடப்பட்டதாகவும் வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவுடனான உறவு இயல்பு நிலைக்கு திரும்பியது: ஜப்பான்

சீனாவுடனான உறவு இயல்பு நிலைக்கு திரும்புவதாக ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே கூறியுள்ளார். இருநாடுகள் இடையேயான உறவில் உரசல் போக்கு உள்ள நிலையில், சீனாவின் பிரதமர் லீ கெக்கியாங் கடந்த மே மாதம் ஜப்பான் சென்று வந்தார். இதை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே, அக்டோபரில் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக செய்தி இதழுக்கு பேட்டி அளித்த சின்ஸோ அபே, சீனாவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜப்பான் - சீனா இடையேயான உறவு இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும், எதிர்காலத்தில் சீன அதிபர் ஸீ ஸின்பிங் ஜப்பானுக்கு அழைக்கப்படுவார் என்றும் அபே குறிப்பிட்டுள்ளார்.