கொடிகாமத்தில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு

யாழ். கொடிகாமம், எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (21) பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் எழுதுமட்டுவாழை சேர்ந்த 50வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காங்கேசந்துறையிலிருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த ரயிலே குறித்த பெண் மீது மோதியுள்ளது. குறித்த பெண், ரயில் பாதையை கடந்து செல்ல முற்பட்டபோது விபத்திற்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் ஞானசார தேரர்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, பொதுபல சேனா தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்துள்ளார். இன்று (22) கல்முனைக்கு 50க்கும் அதிகளவான தேரர்களுடன் வருகை தந்த கலகொட அத்தே ஞானசார தேரர், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதிமொழி ஒன்றை வழங்கி உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்போது கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனை தவிர, உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஏனையோர் தேரரின் உறுதிமொழியை நம்பி உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர். எனினும், மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மாத்திரம் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை தொடர்வதாக கூறினார். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கல்முனை ஸ்ரீசுபத்திராராம மஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரன்முதுகல சங்கரட்ண தேரர், கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ ச.கு. சச்சிதானந்தம் குருக்கள்,…

கொடிகாமத்தில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு

யாழ். கொடிகாமம், எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (21) பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் எழுதுமட்டுவாழை சேர்ந்த 50வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காங்கேசந்துறையிலிருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த ரயிலே குறித்த பெண் மீது மோதியுள்ளது. குறித்த பெண், ரயில் பாதையை கடந்து செல்ல முற்பட்டபோது விபத்திற்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் பெண்ணொருவர் கொலை

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக பொலிஸாரினால் நேற்று (21) மீட்கப்பட்டுள்ளார். செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட துடரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 04பிள்ளைகளின் தாயான ரவீச்சந்திரன் அந்தோனியம்மா (40) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பாக குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில், செட்டிகுளம் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் வீட்டிற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் சந்தேகநபரை தேடி வருகின்றனர். குறித்த பெண், வெங்காய வெடி மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும், சந்தேகநபர் அந்த வெடிபொருள் மூலம் படுகாயமடைந்த நிலையில் தப்பியோடியுள்ளார் எனவும், செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

முஸ்லிம் மக்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும்

இந்த நாட்டில் கடந்த கால சம்பவம் காரணமாக இனங்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கல்முனை பிரதேச செயலகம் விடயம் காரணமாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொள்வதோடு, கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்ட போது தமிழ் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்காக குரல் கொடுத்தார்கள். எனவே இந்த விடயதத்தில் முஸ்லிம் தலைவர்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டால் ஒரு சுமுகமான தீர்வை எட்ட முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாண நுவரெலியா ஹங்குரன்கெத்த முல்லோயா தமிழ் வித்தியாலயத்தின் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம்…

கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்வதனை நிறுத்த வேண்டும்

தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்வதனை நிறுத்த வேண்டும் என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற மக்கள் நலன் காப்பகத்தின் அன்பகம் மூதாளர் உதவிதிட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் கரு்தது தெரிவிக்கையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இவ்வாறான குடும்பங்களிற்கு மக்கள் நலன் காப்பகம் மற்றும் புலம்பெயர் உறவுகள் பலரும் உதவ முன்வந்துள்ளமையை அவர் பாராட்டினார். இதேவேளை யுத்தத்தினால் சிதை்கப்பட்ட ஏழைகளின் வீடுகள் உள்ளிட்டவற்றை சீர்செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தினார். இதேவேளை கல்முனை சம்பவம் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார். உரியவர்கள் உடனடியாக தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்தார் பிரதமர் நேரடியாக குறித்த இடத்திற்கு வருகை தந்து நிலமைகளை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார் போரினால் பாதிக்கப்பட்ட…

வெலிக்கடை கொலை மூவரடங்கிய நீதிபதி

கடந்த 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு, மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட குழாமை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியசரிடம், சட்ட மா அதிபர், இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி ஏற்பட்ட மோதலில் 27 கைதிகள் பலியான சம்பவம் தொடர்பில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகிய இருவரும் கடந்த வருடம் (2018) மார்ச் மாதம் CID யினால்கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.