மாஸ் காட்டும் மஞ்சும்மல் பாய்ஸ்

லையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை தாண்டியுள்ளது.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கியுள்ளார். சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை குவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழ் ரசிகர்களின் வரவேற்பு. கமல்ஹாசனின் ‘குணா’ படத்தின் குகையில் நடக்கும் கதையும், ஆங்காங்கே வரும் இளையராஜாவின் இசையும் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழகத்தில் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்து உதயநிதி ஸ்டாலின், தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் படக்குழுவை பாராட்டியுள்ளார். மேலும், தனது ஆதர்ச நாயகன் என இயக்குநர் சிதம்பரம் கமல்ஹாசனை புகழ்ந்திருந்தார். இதனையடுத்து படக்குழுவை நேரில் அழைத்து கமல் பாராட்டியிருந்தார். முன்னதாக மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமலு’, மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ படங்கள் ரூ.50 கோடி வசூலைத்தாண்டி வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts