மாற்றுக் கல்வி வாய்ப்புகளும் உருவாக்கப்பட வேண்டும்

எமது நாட்டின் கல்விப் பரப்பில் புதிய மாற்றங்களை உள்வாங்கி கல்வியின் புதிய யுகத்திற்குள் நுழைய வேண்டும் என்றும், 50 களில் இருந்து சிங்களம் மட்டும் சிங்களம் மட்டும் என்று கூறும் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு ஒரு நாடாக முன்னேற முடியாது என்றும், நாமாகவே சுவர்களைக் கட்டிக்கொண்டு, எல்லைகளை வகுத்து, சுருங்கிய மனப்பாங்குடன் செயல்படும் போக்கில் ஒரு நாடாக உண்மையான சுபீட்சத்தை எட்ட முடியாது என்பதால்,சிங்களம் உள்ளடங்களாக பிற மொழிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவது போலவே ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் ஒதுக்கீட்டு மீதான குழுநிலை விவாதத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (5) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் வெளியேறும் மாணவர்கள் தொழிற்பயிற்சி கல்வியை நாடினாலும்,தற்போது, அதன் தரம் குறைந்துள்ளதாகவும்,உயர்கல்வி வாய்ப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும்,உயர் கல்விக்கான வாய்ப்புகளை இழந்தோர்களுக்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்த வேண்டும் என்றும், பல்கலைக்கழக வாய்ப்பைப் பெறாத மாணவர்களுக்கும் உயர்கல்விக்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.

தனியார் கல்வியை எதிர்க்கும் பெரும்பான்மையினரின் பிள்ளைகள் தனியார் பல்கலைக்கழகங்களிலும் நிறுவனங்களிலும் கல்வி கற்கிறார்கள் என்றும்,தனது சொந்தக் பிள்ளைகளுக்கு வழங்கும் அதே விருப்பத்தை நாட்டு பிள்ளைகளுக்கும் ஏன் நாட்டிலுள்ள ஏனைய பிள்ளைகளுக்கும் அந்த முறைமை பொருத்தமற்றது என்று கேள்வி எழுப்பிய அவர்,ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையின் ஊடாக நாட்டின் இலவச கல்வியை பலப்படுத்தி,முற்போக்கான மற்றும் நவீனமயமாக்கல் செயற்பாடுகளை முன்னெடுத்து,கல்வி வாய்ப்புகளையும் கல்விசார் தெரிவுகளையும் வழங்குவதற்கு செயற்படுவோம் என தெரிவித்தார்.

Related posts