மிரட்டும் மேக்கிங்கில் மாஸ் காட்சிகள் – பிரபாஸின் ‘சலார்’

பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரசாந்த் நீல் ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘சலார்’.

ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.
முதலில் இந்தப் படம் செப். 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் படத்தின் பணிகள் முடிவடையாததால், டிச.22 ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related posts