குரல்வளை பாதிப்பால் பேச முடியவில்லை

குரல்வளை பாதிக்கப்பட்டு பேச சிரமப்படுவதால் நேரில் ஆஜராக காவல்துறையிடம் நடிகர் மன்சூர் அலிகான் கால அவகாசம் கேட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு காவல்துறையினர் நடிகர் மன்சூர் அலி கான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் விசாரணைக்கு இன்று (நவ.23) நேரில் ஆஜராக கோரி அவருக்கு ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், குரல்வளை பாதிக்கப்பட்டு பேச சிரமப்படுவதால் நேரில் ஆஜராக காவல்துறையிடம் நடிகர் மன்சூர் அலிகான் கால அவகாசம் கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் மன்சூல் அலிகான் கூறியிருப்பதாவது: “எனது குரல்வளை 15 நாட்கள் தொடர் இருமலால் நேற்று மிகவும் பாதிக்கப்பட்டு பேச மிகவும் சிரமமாக இருப்பதால், நான் மருத்துவ சிகிச்சையில் இருந்து மீண்டு, நாளை தங்களை சந்திக்க தாங்கள் குறிப்பிடும் நேரத்தில் வர அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts