நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகை சமந்தா இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொண்டார்.
மயோசிடிஸ் தசை அழற்சி நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகை சமந்தா அங்கு நடந்த பிரமாண்ட இந்திய சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தெருக்களில் கூட்டத்தினரோடு இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தியபடி நடந்து சென்றார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும் இதில் பங்கேற்றார். சமந்தாவுடன் ஏராளமானோர் போட்டிப்போட்டு செல்பி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் சமந்தா பேசும்போது, “இன்று இங்கு இருப்பது உண்மையாக மிகப்பெரிய கவுரவம்.
இந்திய கலாசாரம், இந்திய பாரம்பரியம் எவ்வளவு சிறந்தது என்பதை நீங்கள் எனக்கு புரியும்படி செய்தீர்கள். இன்று நான் பார்த்த இந்த கணங்கள் என் மனதில் வாழ்நாள் முழுவதும் நிலைத்து நின்றுவிடும்.
இந்த அரிய கவுரவம் எனக்கு கிடைக்கும்படி செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி.
என் ஒவ்வொரு படத்தையும் ஆதரிக்கும் அமெரிக்க மக்களுக்கு நன்றி” என்றார்.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் மிகவும் பிரமாண்டமாக நடக்கும் இந்திய சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் இதற்கு முன்பு அபிஷேக் பச்சன், ராணா, அல்லு அர்ஜுன், அர்ஜுன் ராம் பால், சன்னி தியோல், ரவீனா டாண்டன், தமன்னா ஆகியோர் பங்கேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.