நடிகர்-நடிகைகள் சம்பளத்தில் 30 சதவீதம் குறைப்பு?

தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வற்புறுத்தி உள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்கள், நயன்தாரா, திரிஷா, அமலாபால், ஹன்சிகா உள்ளிட்ட நடிகைளின் படங்கள் தயாரிப்பிலும், படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகளிலும் இருக்கின்றன. 35-க்கும் மேற்பட்ட புதிய படங்கள் தயாரிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வற்புறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கால் தமிழ் திரைப்பட துறை முற்றிலும் ஸ்தம்பித்து, பணிகள் முடங்கி உள்ளது.

எனவே தற்போது தயாரிப்பில் இருக்கும் திரைப்படங்கள், திரைக்கு வர இருக்கும் திரைப்படங்களின் கதாநாயகன், கதாநாயகி, இயக்குனர், இசையமைப்பாளர், கேமராமேன் மற்றும் முக்கியமான டெக்னிஷியன்கள், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியத்திலிருந்து குறைந்தபட்சம் 30 சதவீதம் சம்பளத்தை விட்டுக்கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு உதவவேண்டும்.

திரைத்துறை பைனாஸ்சியர்களும் 2 மாதங்களோ, 3 மாதங்களோ அல்லது 4 மாதங்களோ வட்டி தொகையினை முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும்.

இயல்புநிலை திரும்பியதும் சிறிய பட்ஜெட் படங்கள், அடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் என்று மாறி மாறி வெளியாகும் வகையில் காலச்சூழலை உருவாக்கி சிறு தயாரிப்பாளர்களை வாழ வைப்பதற்கு தியேட்டர்கள் சங்கமும், வினியோகஸ்தர்கள் சங்கமும் துணை நிற்கவேண்டும்”.

Related posts