10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘லியோ’.இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து ‘லியோ’ படத்தில் நடித்துள்ள நடிகர் அர்ஜுன் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘லியோ’ படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் யூ டியூபில் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related posts