‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் இரண்டாவது பாடல்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது. ‘ஐ அம் சோ பிராப்ளம்’ என்ற இந்த பாடலை துரை எழுதியுள்ளார்.

ஒ.எப்.ஆர்.ஒ, டி.எம்.எஸ் செல்வகுமார், சுஷா, கானா முத்து ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts