மரக்கறிகளின் விலை 70 சதவீதம் அதிகரிப்பு !

கனமழையால் காய்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் 70 சதவீதம் உயர்ந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான மரக்கறிகளின் விலை கிலோ 300 ரூபாவை தாண்டியுள்ளது.

கேக்கிரி, வெள்ளரி, வாழைக்காய், பலாக்காய், நோக்கல், முள்ளங்கி ஆகியவை மட்டுமே 100 ரூபாவுக்கு குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அத்தோடு மலையகத்தில் இருந்து கொண்டுவரப்படும் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதனால் வாழைக்காய், பலாக்காய் போன்ற மரக்கறிகளை பொதுமக்கள் அதிகம் கொள்வனவு செய்வதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தில் சீரற்ற வானிலை தொடர்வதால் சந்தைக்கு கொண்டுவரப்படும் காய்கறிகளின் அளவும் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

Related posts