முதல் ஷோ ஓடியதுமே வெற்றி விழா

“படம் வெளியாகி ஒரு ஷோ ஓடிவிட்டாலே உடனே வெற்றி விழா கொண்டாடிவிடுகிறார்கள்” என இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி பேசியுள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி நடிப்பில் வெளியான படம் ‘தலைநகரம்’. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘தலைநகரம் 2’ உருவாகியுள்ளது. ‘முகவரி’, ’தொட்டி ஜெயா’ ஆகிய படங்களை இயக்கிய VZ துரை இயக்கியுள்ளார்.

ரைட் ஐ சார்பாக எஸ்.எம். பிரபாகரன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சுந்தர்.சி, “தலைநகரம் 2-ம் பாகத்தை எடுக்கலாம் என்று யார் சொன்னாலும் கேட்டிருக்க மாட்டேன். ஆனால் இயக்குநர் துரை கேட்டபோது எனக்கு எந்த யோசனையும் இல்லை. உடனே ஓகே சொல்லிவிட்டேன்.

அவரின் ‘இருட்டு’ படம் மிக அருமையான திரைக்கதை. அந்தப் படத்தை அவர் எடுத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. அப்போது அந்தப் படத்தின் வெற்றியை நாங்கள் கொண்டாடவில்லை.

ஆனால், ஒரு படத்தின் வெற்றியை கொண்டாட வேண்டும் என்பது இப்போதுதான் தெரிகிறது. ஏனென்றால், இப்போதெல்லாம் ஒரு படம் ரிலீசாகி முதல் ஷோ ஓடினதும் வெற்றி விழா கொண்டாடி பார்ட்டி வைத்துகொள்கிறார்கள். இனிமேல் நாமும் அதை செய்ய வேண்டும்.

இன்னும் நான் இந்தப் படத்தை பார்க்கவில்லை. அதற்கு இயக்குநர் மீதான நம்பிக்கைதான் காரணம். சினிமாவை காதலிக்கும் இயக்குநர். சினிமா தற்போது மாறிவிட்டது. நாம் எடுக்கும் கன்டென்ட்டை நோக்கி கொண்டுபோனாலே படம் வெற்றிபெற்றுவிடும். ‘அரண்மனை’ போல் இந்தப் படமும் எனக்கு அடுத்தடுத்த பாகங்கள் கொண்ட படங்களாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.

Related posts