‘கொன்றால் பாவம்’ படத்தின் டிரைலர்

கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘கொன்றால் பாவம்’.

இந்த படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

1981-களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையான இந்த திரைப்படம் மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.

பிரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமார் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த டிரைலரை இசையமைப்பாளர் அனிரூத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் மார்ச் 10-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts