100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘தாய் கிழவி’ பாடல்

யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

இந்த படத்தில் அனிருத் இசையில் தனுஷ் எழுதி பாடிய ‘தாய் கிழவி’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது. இந்த நிலையில், ‘தாய் கிழவி’ பாடல் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Related posts